செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

220 கோடி வசூலித்த படத்தை ரீமேக் செய்யும் ஆர் ஜே பாலாஜி.. எல்லாம் மூக்குத்தி அம்மன் அருள் தான்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் ரேடியோ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருபவர் ஆர் ஜே பாலாஜி. முதலில் காமெடியனாக தன்னுடைய கேரியரை தொடங்கியவர் தற்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார்.

ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த இரண்டு படங்களும் செம வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் வெறும் 29 கோடி பட்ஜெட்டில் உருவாகி 220 கோடி வசூலித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றில் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பக்கா என்டர்டெயின்மென்ட் படம் எடுப்பதில் கில்லாடி ஆர் ஜே பாலாஜி. அதில் இன்றைய காலை அரசியலை சேர்ந்து நக்கலும் நையாண்டியும் கலந்து ரசிகர்களை கவரும் வண்ணம் தன்னுடைய படங்களை கொடுத்து வருகிறார்.

ஹீரோவாகி விட்டால் நான்கு பாடல்கள் இரண்டு சண்டைக் காட்சிகள் என்று வழக்கமான பாதையில் பயணிக்காமல் எதார்த்தமான கதையில் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

badhaai-ho-cinemapettai
badhaai-ho-cinemapettai

அந்த வகையில் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பதாய் ஹோ. முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகியுள்ள திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாராம்.

Trending News