R J Balaji: நடுத்தர மக்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது இந்த கிரெடிட் கார்டு தான். அதனாலேயே பல வங்கிகள் ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து கிரெடிட் கார்டு வாங்கலையோ கிரெடிட் கார்டு என கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
இப்படி ஆசை வார்த்தைக்கு மயங்கி கிரெடிட் கார்டை வாங்கி பணத்தை கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான பலரும் இருக்கின்றனர். கார்டு இருக்கிறதே என இ எம் ஐ மூலம் பொருளை வாங்கி போட்டு அவதிப்படும் மக்கள் தான் இங்கு ஏராளம்.
அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி கிரெடிட் கார்டால் நொந்து போன தன்னுடைய சொந்த அனுபவத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு இவர் தன்னிடம் இருக்கும் கிரெடிட் கார்டு போதாது என்று நண்பர்களின் கார்டுகளையும் வாங்கி உபயோகப்படுத்திக் கொள்வாராம்.
காசு இருக்கும் போது செலவு செய்து விட்டு அதை அடுத்த மாதம் திருப்பி கட்டும் போது ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனால் கடன் சுமைக்கு ஆளாகி அவர் மன உளைச்சலுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார். இதற்காக சில தெரப்பிகளையும் அவர் எடுத்துக் கொண்டாராம்.
ஒரு கட்டத்திற்கு மேல் தன்னிடம் இருந்த கிரெடிட் கார்டு அத்தனையையும் அவர் உடைத்துப் போட்டு அதை பயன்படுத்துவதை நிறுத்தி இருக்கிறார். தற்போது தன்னிடம் ஒரே ஒரு கார்டு மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் அதிக பொருட்களை வாங்கி போட்டு ஆபத்தில் சிக்க வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Also read: பிரமாதம்! சிங்கப்பூர் சலூனை வைத்து சக்க போடு போடும் ஆர் ஜே பாலாஜி டிரைலர், லோகேஷ் என்ட்ரி செம