புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியை சீண்டிய ஆர் ஜே பாலாஜி.. படத்தில் பெண்களை இப்படியா காட்டுவது

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வரும் ஆர்ஜே பாலாஜி பொதுவாக தன்னுடைய வெளிப்படையான பேச்சால் பல சர்ச்சைகளுக்கு உள்ளாவார் இருப்பினும் இவரது பேச்சை கேட்பதற்காகவே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி இத்திரைப்படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இடம்பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள எங்க வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனிடையே இத்திரைப்படம் குறித்து மேடையில் பேசிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் வரும் பெண்களின் கதாபாத்திரங்களை குறித்து விமர்சித்துள்ளார்.

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் வெளிப்படையாக தைரியமாக பேசுவார், ஆனால் அவரை கெட்டவர் என்றும் அதே திரைப்படத்தில் அமைதியாக வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியாக நடித்திருக்கும் சௌந்தர்யா நல்லவர் என்றும் சித்தரித்து காட்டியிருப்பார்கள். மேலும் சூப்பர் ஸ்டாரின் மன்னன் திரைப்படத்தில், தன் சொந்த உழைப்பில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜயசாந்தி கெட்டவர், அம்மாவிற்கு காபி போட்டுத் தரும் குஷ்பூ நல்லவர் என்பது போல பெண்களை ஒப்பிட்டு காண்பித்திருப்பார்கள்.

இதனிடையே ஒவ்வொரு பெண்ணிற்கும் மரியாதை உண்டு என்றும் சிகரெட் பிடிக்கும் பெண்கள் கெட்டவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மட்டும் நல்லவர்கள் என பிரித்துப் பார்ப்பது கொஞ்சம் கூட சரியானதல்ல என்று ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பெண்ணிற்கு அவள் என்ன செய்ய வேண்டும் என்பதில் முழு சுதந்திரம் உண்டு. அவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதிலும் அவர்களே முடிவு செய்ய வேண்டும் நாம் கிடையாது என அழுத்தமாகப் பேசினார்.

இதனிடையே ஆர்ஜே பாலாஜி எத்தனையோ நடிகர்களின் திரைப்படங்களை எடுத்துக்காட்டாமல் சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களை பற்றி மட்டும் ஒப்பிட்டு மட்டும் பேசியது சற்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் ஆர் ஜே பாலாஜி நான் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் தான், ஆனால் அவரது படங்களிலேயே இதுபோன்ற பெண்களை பிரித்து காட்டுவது சரியானதாக படவில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.

Trending News