வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

6 கோடி சம்பளம் கேட்ட RJ பாலாஜி.. முன்னணி நடிகர்களால் சினிமாவை வெறுத்துப்போன தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் நேரடியாக ஹீரோவாக களமிறங்காமல் ஆர்.ஜே, வி.ஜேவாக இருந்து படிப்படியாக தங்களது திறமையால் ஹீரோவாக முன்னேறியவர்களும் உண்டு. உதாரணமாக சிவகார்த்திகேயன், ஆர்.ஜே. பாலாஜி போன்ற நடிகர்களை கூறலாம்.

ஆர்.ஜேவாக இருந்து தமிழ் சினிமாவை பங்கமாக கலாய்த்து விமர்சனம் செய்த ஆர்.ஜே.பாலாஜியே பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இவரது காமெடிக்காகவே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் தற்போது இவரை நாயகனாக வைத்து சில படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் தான் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சங்கிலி முருகன் இவரை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என அணுகிய போது அவர் 6 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கிலி முருகன் அந்த படமே வேண்டாம் என முடிவு செய்து கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சமீபகாலமாக நடிகர்களின் சம்பள பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறுவது போல் நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு படம் ஹிட்டானால் போதும் தனது சம்பளத்தை இருமடங்கு உயர்த்தி விடுகிறார்கள் என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.

siva-rjbalaji
siva-rjbalaji

Trending News