சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பச்சை சட்டைக்கு பிடித்திருந்தால் போதும்.. ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பதாயி ஹோ படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்பட்ட வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சரவணனுடன் ஆர் ஜே பாலாஜி இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கிறார். இவருடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.

50 வயதில் பேரப்பிள்ளைகள் எடுக்கும் நேரத்தில் ஒரு தம்பதியர் குழந்தை பெற்று கொண்டால் குடும்பத்தில் உள்ளவர்களும் அக்கம்பக்கத்தினரும் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை நகைச்சுவை உணர்வுடன் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக எந்த படம் வெளிவந்தாலும் அதை தனது யூடியுப் மூலம் விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், வீட்ல விசேஷம் திரைப்படத்தையும் கண்டபடி விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான ஆர் ஜே பாலாஜி, ப்ளூ சட்டை மாறன் போல் மிமிக்ரி செய்து ப்ளூ சட்டை மாறனை விளாசியுள்ளார்.

‘யாருக்காக இந்த படம் எடுத்தோமோ அவர்களுக்கு மட்டும் பிடித்திருந்தால் போதும். பச்சை சட்டை உனக்கு இந்த படம் பிடித்திருந்தால் போதும். எந்த ப்ளூ சட்டைக்குள் பிடிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று ஆர் ஜே பாலாஜிக்குறிய குசும்புடன் கலாய்த்து தள்ளிவிட்டார்.

இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கும் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘வேண்டாம் விட்டுவிடு அழுதுடுவேன்’ என்ற கமெண்ட்டை பதிவிட்டு ஆர் ஜி பாலாஜிக்கு ரெஸ்பான்ஸ் செய்துள்ளனர்.

Trending News