சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திகிலூட்டும் காட்சிகள், பதற வைக்கும் சிறைச்சாலை.. வெளியானது ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் டீசர்

Sorgavasal Teaser: ஆர் ஜே பாலாஜி ஒரு நடிகராக இயக்குனராக தற்போது அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கும் சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதை அடுத்து தற்போது அவர் நடித்திருக்கும் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், நட்டி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் டீசர்

சிறைச்சாலையில் நடக்கும் கொடூர காட்சிகளை மையப்படுத்தி வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் செல்வராகவன் ஒருவரை ரத்தம் தெறிக்க வெட்டும் காட்சியே படு பயங்கரமாக இருக்கிறது.

அதேபோல் ஜெயிலில் நடக்கும் வன்முறை காட்சிகள், ஆறுதல் இல்லாமல் புலம்புதல், ஆண்டவரே எங்களை காப்பாற்றுங்கள் போன்ற வசனங்களும் தீயாக உள்ளது. இதில் ஆர் ஜே பாலாஜியின் தோற்றமும் புதிதாக இருக்கிறது.

மேலும் கிரிஸ்டோ சேவியர் இசை, கேமரா கோணம் அனைத்தும் விறுவிறுப்புடன் இருக்கிறது. இப்படியாக பதற வைக்கும் காட்சிகள் கொடூரமான சிறைச்சாலை என டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Trending News