Nayanthara: நயன்தாரா நடிப்பை விட பிசினசில் தான் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த கேப்பில் த்ரிஷா அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து நம்பர் ஒன் இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் இவர் அம்மனாக நடிக்க இருக்கிறார். அதன்படி ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி நயன்தாராவை அம்மனாக வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்திருந்தார்.
கடந்த 2020ல் வெளிவந்த இப்படம் 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இதில் நயன்தாராவின் சம்பளம் மட்டுமே ஆறு கோடி ஆகும். இத்தனைக்கும் அவர் படத்தில் அம்மனாக அவ்வப்போது தான் வந்து செல்வார்.
அம்மன் வேஷம் போடும் திரிஷா
அதற்கே அவ்வளவு சம்பளம் வாங்கி இருந்தார். படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆர் ஜே பாலாஜி மீண்டும் மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் இந்த முறை நயன்தாராவுக்கு சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது என திரிஷாவை புக் செய்து விட்டார்.
ஏனென்றால் இப்போது நயன்தாராவின் சம்பளம் 12 கோடியை தாண்டி விட்டது. அதை கேட்ட அரண்டு போன ஆர்ஜே பாலாஜி திரிஷாவிடம் சரணடைந்து விட்டார். ஏனென்றால் அவர் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றது போல் சம்பளம் கொடுங்கள் என்று கூறிவிட்டாராம்.
மேலும் இப்படத்திற்காக அவர் பத்து முதல் 12 நாட்கள் வரை தான் கால்ஷீட் கொடுக்க வேண்டும். அதனாலேயே திரிஷா இப்போது சந்தோஷமாக அம்மன் வேஷம் போட தயாராகி விட்டார்.
லியோ படத்திற்கு பிறகு விடாமுயற்சி தக்லைப் என பிசியாக இருக்கும் இவர் இப்போது 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவை ஓரம் கட்டி சாதித்த த்ரிஷா
- திரிஷாவின் மொத்த மானத்தையும் வாங்கிய சுச்சி லீக்ஸ்
- ஒரு இடத்துல சம்பாதித்ததை 9 இடத்தில் முதலீடு செய்யும் நயன்-விக்கி
- Nayanthara: குழந்தையை பங்கு போட்டுக் கொண்ட விக்கி, நயன் ஜோடி