செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தலைவர் பாட்டை வைத்து மாயாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பிராவோ.. இப்பவும் பற்றி எரியும் பிக் பாஸ்

Bigg Boss VJ Bravo: பொதுவாக பக்கத்து வீட்டில ஒரு சண்டை நடக்கிறது என்றால் அதை வேடிக்கை பார்ப்பது வழக்கம். அதை தினம் தினம் வீட்டில் இருந்தபடியே பார்க்கும் படியாக அமைந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அதனாலேயே என்னமோ பிக் பாஸ் என்றாலே மக்கள் குதூகலமாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற்று நிகழ்ச்சி முடிவடைந்து இருக்கிறது.

இதில் 22 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தாலும் சில போட்டியாளர்கள் வன்மத்தை மட்டுமே காட்டி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார்கள். அந்த லிஸ்டில் மாயா, பூர்ணிமா மற்றும் இவர்களுடன் சேர்ந்து ஒரு கேங் அமைந்தது. அதிலும் மாயா ஒவ்வொருவரையும் நல்லா புரிந்து கொண்டு அவர்களை எப்படி கவுக்கலாம் என்று திட்டத்தை தீட்டி விளையாட ஆரம்பித்தார்.

இவருடன் சேர்ந்து பூர்ணிமாவும் ஒன்னுக்கு ஒன்னு சலிச்சதில்ல என்பதற்கு ஏற்ப இரண்டு பேரும் மற்றவர்களை ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி கடைசி வரை விளையாடி வந்தார்கள். இவர்களிடம் மாட்டிக் கொண்டு மற்ற போட்டியாளர்கள் பலிகாடாக சிக்கிவிட்டார்கள். இதற்கெல்லாம் நடுவில் சிலர் யார் வம்பு தும்புக்கும் போக வேண்டாம். இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவோம் என்று சில போட்டியாளர்கள் இருந்தார்கள்.

Also read: பிக் பாஸ் அர்ச்சனா விஜய் டிவிக்கு கொடுத்த முதல் பேட்டி.. குதர்க்கமாக பதிலளித்த டைட்டில் வின்னர்

அவர்களில் ஒருவர் தான் ஆர்ஜே பிராவோ, யாருடைய மனதையும் புண்படுத்தாமல், எதார்த்தமான விளையாட்டுடன், இது ஒரு கேம் ஷோ அவ்வளவுதான் என்ற மனநிலையை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். அதனாலேயே என்னமோ இவரை வெறுக்கும் அளவிற்கு யாரும் இல்லை. முக்கியமாக பாசிட்டிவ் வைப்ரேஷன் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் ஆர்ஜே பிராவோவிடம் இருந்தது.

அப்படிப்பட்ட இவர் சில காரணங்களால் வெளியேறினார். அந்த வகையில் இறுதி சுற்றுக்கு மோட்டிவேஷனாக போன இவர் அர்ச்சனாவுக்கு பக்கபலமாக இருந்தார். தற்போது இவர் காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது ஒரு பாட்டை கேட்டிருக்கிறார். அதன் மூலம் மாயாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக லாஸ்ட் லிரிக்ஸ் பாடி உள்ளார்.

அதாவது “இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா, இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா, யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்” என்ற வரிகளுடன் தலைவர் பாஷையில் பதிலடி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் கர்மா திருப்பி அடிக்கும் என்பதற்கு ஏற்ப பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் இப்போதும் பற்றி எரிந்து கொண்டு வருகிறது.

Also read: பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த காரணத்தை போட்டு உடைக்கும் போட்டியாளர்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி டிராமா போடும் பச்சோந்தி

Trending News