தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள் என அனைவரும் நடிகர்களாக கால் பதித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக களம் இறங்கியவர் தான் நடிகர் ஆர்.கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலில் ஆர்.கே சுரேஷ், விஜய் சேதுபதியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார். அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை, விஷால் நடிப்பில் வெளியான மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய ஆர்.கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், ஆர்.கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டைநாய் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சமுத்திரகனியின் நண்பனாக நடித்து இருந்த ஆர்.கே சுரேஷ் தற்போது வன்முறை என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். இப்படத்தை மஞ்சித் திவாகர் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து ஆர்கே சுரேஷ் பத்மகுமார் என்பவர் இயக்கும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிக்காக 22 கிலோ உடலை ஏற்றி 105 கிலோவிற்கு உடலை மாற்றி இருக்கிறார் ஆர்.கே சுரேஷ். இந்த உடல் கட்டுடன் தற்போது ஆர்.கே சுரேஷ் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதுவரை இவர் நடித்தப் படங்களில் வேட்டி சட்டை, லுங்கி என பக்கா கிராமத்து இளைஞராகவே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு தற்போது இந்த போட்டோ ஷூட் புதிதாக உள்ளது. காரணம் கோட் சூட் அணிந்து பக்கா மாடர்ன் டிரஸ்ஸில் ஆர்.கே சுரேஷ் போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
