சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அஜித், சூர்யா பட நடிகர் மனோகர் காலமானார்.. இது தான் காரணமாம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பல படங்கள் நடித்துள்ளார் ஆர் என் ஆர் மனோகர். இவர் குறிப்பிட்ட படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் தெரியும் அளவிற்கு இவருடைய நடிப்பால் ஓரளவிற்கு பிரபலமானார். இவர் கிட்டத்தட்ட விசுவாசம் கைதி மற்றும் காப்பான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு உறவுக்கார மாமாவாக நடித்திருப்பார். அதேபோல் காப்பான் படத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக நடித்துள்ளார். இந்த 2 திரைப்படமும் இவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான டெடி படத்தில் நடித்துள்ளார்.

இவரது அண்ணன் என் ஆர் இளங்கோவன் திமுக கட்சியில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார் தற்போதைய வருது தம்பி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மாரடைப்பாக இருக்கலாமென நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்

rnr manohar
rnr manohar

20 நாட்களுக்கு மேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆர்எஸ் மனோகர் காலை 8 30 மணி அளவில் அகால மரணம் அடைந்தார். இதனால் சினிமா வட்டாரங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

Trending News