சந்தானம் காமெடியன்-ல் இருந்து ஹீரோ அவதாரம் எடுத்தபோது அவரை ஏராளமானோர் விமர்சனம் செய்தார்கள். இதெல்லாம் இவருக்கு தேவை இல்லாத வேலை என்று கூறி வந்தனர்.
ஆனால் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இவரை தொடர்ந்து சதீஷ், சூரி என்று அனைவருமே தற்போது ஹீரோக்கள் தான்.
இப்போதைக்கு காமெடியன் என்று இருப்பவர்கள், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ரோபோ ஷங்கர் போன்றவர்கள் தான். இதில் யோகி பாபு ஹீரோவாகவும் காமெடியனாகவும் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.
இப்படி இருக்க மற்ற ஒரு முக்கியமான காமெடியன் தற்போது அவரது 45-ஆவது வயதில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
45 வயதில் ஹீரோ..
முன்பெல்லாம் சினிமாக்களில் நிறைய sterortype-கள் இருந்தது. ஆனால் தற்போது உள்ள நடிகர்கள் அதையெல்லாம் உடைத்து சாதித்து வருகிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு நடிக்காத ஹீரோயின் நடித்தது கொண்டு இருக்கிறார்கள். வெள்ளை தோல் இல்லாமல், கருநிறமாக இருக்கும் அழகிகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது.
இப்படி இருக்க தன்னுடைய மகளுக்கு சமீபத்தில் திருமணத்தை முடித்து வைத்த 45 வயதான நடிகர் ரோபோ ஷங்கர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
வாயை மூடி பேசவும் எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர் தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, கோவை பாபு, மீசை ராஜேந்திரன் என்று பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை, டி மீடியா தயாரிப்பில், பாசர்.ஜெ.எல்வின் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.