திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அம்பலப்படுத்திய ரோபோ சங்கர்.. வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டியே பங்கு

Robo Shankar Controversy: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர், டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். அதிலும் மாரி படத்தில் தனுஷ் உடன் முழுக்க பயணித்தார். அந்த படத்தின் மூலம் தான் தனுஷுக்கும் ரோபோ ஷங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்த சமயத்தில் தனுஷை குறித்த நிறை விஷயங்கள் ரோபோ ஷங்கருக்கு தெரியவந்துள்ளது.

அதை இப்போது சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வசமாக சிக்கிக் கொண்டார். ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மது பழக்கத்திற்கு அடிமையாகி உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல 100 கிலோவுக்கு மேல் இருந்த ரோபோ சங்கர் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறிய புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

Also Read: மொத்த சோலியையும் ஒரே மேடையில் முடித்து விட்ட ரோபோ சங்கர்.. நூலிலையில் உயிர்தப்பித்தும் துரத்தும் கெட்ட நேரம்

சமீபத்தில் ரோபோ சங்கர், ராமாபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் நடத்திய போதை பழக்கத்திற்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டு, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தான் பட்ட துயரத்தை எடுத்துக் கூறி, இனி யாரும் மது அருந்த வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாரி படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த போது அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தனுஷ் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து விட்டார். எனக்கு இருந்த அதே கெட்ட பழக்கம் தான் தனுஷுக்கும் இருந்தது என்று அவர் அளித்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஹன்சிகாவின் காலை தொட முயற்சி செய்த ரோபோ சங்கர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட படக்குழு

ரோபோ சங்கர் அதிக மது பழக்கத்தால் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டது ஊரறிந்தது. ஆனால் தனக்கு மட்டுமல்ல டாப் நடிகரான தனுஷும் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கிறார் என சப்பக்கட்டு கட்டி இருக்கிறார். இது தேவையில்லாத ஒப்பீடு. ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு அதில் இருந்து மீண்டும் வந்து விட்டோம் என்றால், அடுத்த வேலை என்ன என்பதை பார்த்துவிட்டு போய்விடனும்.

அத விட்டுட்டு தனுஷுக்கும் அந்த கெட்ட பழக்கம் இருந்தது என சொல்லி வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார். இது மட்டுமல்ல ஆதி, ஹன்சிகா நடிப்பில் வெளியான பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் ஹன்சிகாவின் முழங்காலை தடவ விடல என சபை நாகரிகம் இல்லாமல் மேடையில் ரோபோ சங்கர் பேசியதும் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

Also Read: ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. ஹீரோயினையே மாற்றிய தனுஷ்

Trending News