வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹன்சிகாவின் காலை தொட முயற்சி செய்த ரோபோ சங்கர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட படக்குழு

Robo Shankar Controversey: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். அதன் பிறகு அது இது எது, டான்ஸ் ஷோ என பங்கெடுத்துக் கொண்ட இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்திருக்கிறார். அதன் பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்க ஆரம்பித்தன. சினிமா வாய்ப்பிற்கு பிறகு தொலைக்காட்சிகளில் அவ்வளவாக தலை காட்டவில்லை.

மாரி மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் குறிப்பிடத்தக்கவை. இவர் மட்டும் இல்லாது இவருடைய மகள் இந்திரஜா சங்கர் தளபதியின் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் இவருடைய மனைவி பிரியங்கா ரோபோ சங்கரும் நிறைய வெப் சீரிஸ் களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரோபோ சங்கருக்கு நேரம் சரியில்லாதது போல் அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன.

Also Read:உயிர் பயத்தால் ரோபோ சங்கர் எடுத்த அதிரடி முடிவு.. அதுக்குன்னு 21 வயசுல இப்படி செய்யணுமா!

லைசன்ஸ் இல்லாமல் கிளிகளை வீட்டில் வளர்த்தார் என்ற புகார் தொடங்கி, சட்டென உடல் எடை குறைந்து காணப்பட்ட இவருடைய புகைப்படங்களுக்கு பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்தனர். பின்னர் அவருடைய குடும்பமே முன்வந்து அவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் பேட்டிகள் கொடுத்தனர். தற்போது ரோபோ சங்கரும் தன்னுடைய சினிமா பணிகளுக்கு திரும்பி விட்டார்.

ஆதி மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் பார்ட்னர் திரைப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ரோபோ சங்கரும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விழா ஒன்றில் பேசிய ரோபோ சங்கர் என்ன பேசுவது என்றே தெரியாமல் ஹன்சிகாவை பற்றி அநாகரீகமாக பேசி மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். ஹன்சிகாவை மெழுகு சிலை போல் இருக்கிறார், மைதா மாவை பிசைந்து வைத்தது போல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்திருக்கிறார் ரோபோ.

Also Read:பட்ட பின் புத்தி தெளிந்த ரோபோ சங்கர்.. மீடியா முன் உண்மையை போட்டு உடைத்த சம்பவம்

மேலும் படத்தில் ஹன்சிகாவின் காலை தொடுவது போல் ரோபோ சங்கருக்கு காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஹன்சிகா அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லையாம். ஹீரோ மட்டும் தான் டச்சிங், அதர்ஸ் நோ டச்சிங் என்று சொன்னதாக சொல்லி இருக்கிறார் ரோபோ. அதிலும் உங்களுடைய கால் விரலையாவது தொட்டுக் கொள்கிறேன் என்று கெஞ்சி கேட்டதற்கு ஹன்சிகா முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். இதிலிருந்து ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான் என்று புரிந்து கொண்டேன் என்று வேறு சொல்லி இருக்கிறார்.

ரோபோ சங்கர் பேசிவிட்டு உடனே கிளம்பிவிட்டார். அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் இதுபோன்று மேடை நாகரிகம் தெரியாதவர்களை பேச அனுமதிக்காதீர்கள், ஒரு கதாநாயகியை பற்றி இப்படி பேசுவது ரொம்பவே அநாகரீகமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். ரோபோ பேசியதன் விளைவைப் புரிந்து கொண்ட பட குழு உடனே அவர் பேசியதற்கு பகிரங்கமாக அந்த மேடையிலேயே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.

Also Read:பயில்வான் சொன்னது உண்மைதான் போல.. ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து உண்மையை உளறிய போஸ்

Trending News