சின்னத்திரையில் இருந்த வெள்ளிதிரையில் கால் பதித்த ரோபோ சங்கரின் சமீபகால புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. அதாவது நல்ல வாட்ட சாட்டமாக இருக்கும் ரோபோ சங்கர் நாளுக்கு நாள் மெலிந்து போய் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
அதற்கு ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா கூறிய பதில் என்னவென்றால் ஒரு படத்திற்காக அவர் உடல் எடையை கணிசமாக குறைத்து வருவதாக கூறியிருந்தார். ஆனால் ரசிகர்களுக்கு இந்த விஷயம் ஏற்றுக்கொள்ள முடியாமல் நிரடலாகவே இருந்தது. மேலும் பயில்வான் கூறிய விஷயம் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read : நிக்க கூட தெம்பில்லாத ரோபோ சங்கர்.. உண்மையை உடைத்த பிரபலம்
அதாவது அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததால் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தற்சமயம் நீக்க கூட தெம்பில்லாத அளவுக்கு ரோபோ சங்கர் இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் கூறியதாக பயில்வான் பேசியிருந்தார். இதனால் ரசிகர்களுக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ரோபோ சங்கரின் நண்பர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ரோபோ சங்கர் உடல்நிலையில் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று கூறி உள்ளார். மேலும் அதற்கான சிகிச்சை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
Also Read : ரோபோ சங்கரை விட மோசமாக மாறிய வெங்கட் பிரபு.. எலும்பும் தோலுமான புகைப்படம்
ரோபோ ஷங்கரை பொறுத்தவரையில் நல்ல மனுஷன் என்றும், நன்றி மறக்காதவர் என்றும் போஸ் வெங்கட் கூறியுள்ளார். மேலும் நாங்கள் இருவரும் மாமா, மச்சான் போல் தான் பழகி வருகிறோம். நான் எது சொன்னாலும் அவரது குடும்பம் கேட்பார்கள். அதுமட்டுமின்றி இன்னும் ஒரு 25 முதல் 30 நாட்களில் ரோபோ சங்கர் குணமாகி விடுவார்.
இப்போதே அவரது உடல் எடை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் இன்னும் ஆறு மாசத்தில் படங்களில் பழையபடி ரோபோ சங்கர் பிஸி ஆகிவிடுவார் என போஸ் வெங்கட் நம்பிக்கை கொடுத்துள்ளார். இந்தச் செய்தி ரோபோ ஷங்கரின் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
Also Read : லால் சலாம் ரஜினியின் கேரியரில் முக்கிய படம்.. கதையை லீக் செய்த பயில்வான்