வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பகத் பாசிலின் அஸ்திவாரத்தை அசைக்க வந்த நடிகர்.. விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட கலக்கம்

Tamil Villain Actors: முன்பு நடிகை நஸ்ரியாவின் கணவராக மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த பகத் பாசில், இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். காரணம் புஷ்பா, விக்ரம் போன்ற படங்களின் இவருடைய அட்டகாசமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் பகத் பாசில் தமிழ் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக ஏஜென்ட் அமராக விக்ரம் படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது இவர் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்று தமிழ் திரை உலகில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்.

Also Read: ஜெயிலர் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வாரி இறைத்த 130 கோடி சம்பள லிஸ்ட்.. வர்மனை விட மூன்று மடங்கு அதிகமாக வாங்கிய யோகி பாபு

சமீபத்தில் இவர் நடித்த மாமன்னன் ரத்னவேல் என்னும் வில்லன் கதாபாத்திரம் அருமையாக இருந்தது. ஆனால் பகத் பாசிலின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிறார் திடீரென்று என்ட்ரி கொடுத்த நடிகர் ஒருவர்.  இப்பொழுது தமிழில் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்துக் கொண்டிருக்கும் பகத் பாசில், விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா மூன்று பேரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் அஸ்திவாரத்தை இப்பொழுது அசைக்க வந்துள்ளார் ஜெயிலர் விநாயகன். தற்போது விநாயகனுக்கு தமிழில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் தேடி வருகிறது. இவர் ஏற்கனவே திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் படத்தின் மூலம்
மறுபடியும் என்ட்ரி கொடுத்து மிரட்டி விட்டிருக்கிறார்.

Also Read: ஜெயிலர் பட வர்மனுக்கு சோறு போட்ட தொழில்.. திறமையை கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கிய வாரிசு நடிகர்

ஏனென்றால் அந்த அளவிற்கு ஜெயிலர் படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் தரமான சம்பவத்தை செய்துள்ளார். இதனால் பகத் பாசில், விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா போன்ற நடிகர்களின் பட வாய்ப்புகளும் இப்போது ஜெயிலர் விநாயகன் கைவசம் செல்வதால் அவர்களுக்கு இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இனி அடுத்தடுத்து வெளியாகும் டாப் நடிகர்களின் படங்களில் நிச்சயம் விநாயகம் இடம்பெறுவார். அந்த அளவிற்கு இப்போது திரை
பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்களின் மத்தியிலும் அதிகமாக பேசக்கூடிய நடிகராக மாறிவிட்டார்.

Also Read: லியோ ரிலீஸுக்கு வந்த பெரும் சிக்கல், லோகேஷ் தலையில் விழுந்த இடி.. ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையாம்

Trending News