வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

முத்துவின் போனை திருடிய ரோகினிக்கு கிடைக்கும் ஏமாற்றம்.. எஸ்கேப் ஆகிய சத்யா, திண்டாடபோகும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி போட்ட பிளான் படி முத்துவின் போனை திருடி விட்டார். அதாவது முத்து சுயநினைவு இல்லாத பொழுது முத்துவின் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து மனோஜ் கோட்டுக்குள் வைத்து விட்டார். பிறகு வீட்டிற்கு வந்ததும் மனோஜிடம் இருந்து போனை எடுத்து விட்டார்.

ஆனால் பாஸ்வேர்ட் போட்டு இருந்திருப்பதால் அதை ஓபன் பண்ண முடியாமல் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வித்யாவிடம் கொடுத்து விட்டார். இது எதுவும் தெரியாத முத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வேலைக்குப் போகும் பொழுது போனை தேடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு போன் இல்லாததால் மீனாவிடம் போன் பற்றி கேட்கிறார்.

அதற்கு மீனாவும் நான் உங்களுடைய போனை எடுக்கவில்லை பார்க்கவும் இல்லை என்று சொல்லி நாலா பக்கமும் முத்து மற்றும் மீனா தேடுகிறார்கள். கடைசியில் போன் எங்க தேடியும் இல்லை என்று தெரிந்ததும் முத்து பதட்டத்துடன் நண்பருக்கு போன் பண்ணி போன் காணவில்லை என்கிற விஷயத்தை சொல்கிறார்.

உடனே நண்பர் போன் தான போன போகுது விடு என்று சொல்லிய நிலையில் முத்து அதில் முக்கியமான வீடியோவை சேவ் பண்ணி வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அப்பொழுது நண்பர், உன்னுடைய மச்சான் சத்தியா திருடின வீடியோ அதில் தானே இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு முத்து ஆமாம் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.

இதை பக்கத்தில் இருந்து கேட்ட மீனா, என்ன வீடியோ என்று கேட்ட பொழுது முத்து எதுவும் சொல்லாமல் மழுப்பி விடுகிறார். ஆனால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ரோகினி மனதுக்குள்ளே சந்தோஷப்பட்டு நீ எங்கே தேடினாலும் போன் கிடைக்காது என்பதற்கு ஏற்ப எதுவும் தெரியாத போல் நிற்கிறார்.

ஆனால் முத்துவின் போனை திருடிய ரோகிணிக்கு பாஸ்வேர்டு தெரியாததால் அதை கடையில் கொடுத்து ஓபன் பண்ணி விடலாம் என வித்யா ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால் ரோகிணி எதிர்பார்த்த விஷயங்கள் எதுவும் இல்லாமல் ஏமாறப்போகிறார். அந்த வகையில் சத்யாவும் கிரேட் எஸ்கேப் ஆகிவிடுவார்.

ஆனால் மனோஜ் தான் மாட்டப் போகிறார். ஏனென்றால் மனோஜ் டீலர்ஷிப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மொத்த பணத்தையும் வாரி இறைத்து ஒரு பார்ட்டியை நடத்தினார். ஆனால் அந்த டீலர்ஷிப் மனோஜ்க்கு கிடைக்க போவதில்லை. அதற்கு பதில் கடன் பட்டு பணத்தை அடைக்க முடியாமல் திண்டாட போகிறார். அத்துடன் ரோகிணியும் இனி வரும் எபிசோடுகளில் முத்துவிடம் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்.

Trending News