வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திருந்திய மீனாவின் தம்பிக்கு குடைச்சல் கொடுக்கும் ரோகினி.. மாட்டப் போகும் முத்து, விஜயா எடுக்கும் முடிவு

Sirakaidkkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தம்பி வாழ்க்கையில் இனி சிட்டி குறுக்கிடக் கூடாது என்பதற்காக மீனா தனியாக சிட்டியை பார்த்து பேச போனார். ஆனால் போன இடத்தில் மீனாவுக்கும் சிட்டிக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் மீனாவை சிட்டி கீழே தள்ளிவிட்டார். அந்த நேரத்துக்கு முத்து வந்து சிட்டியை அடித்து கையை உடைச்சிட்டாறு. ஆனாலும் மீனாவின் தலையில் அடிபட்டு இருக்கிறது, ரத்தம் வந்திருக்கிறது என்று தெரிந்ததும் முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டார்.

பிறகு மீனாவை ஆஸ்பத்திரியில் கூட்டிட்டு போயி ட்ரீட்மெண்ட் எடுத்த முத்து அங்கிருந்து மீனாவின் அம்மாவுக்கு போன் பண்ணி சரியான நேரத்தில் எனக்கு தகவல் சொன்னிங்க. இல்லை என்றால் பெரிய பிரச்சனை நடந்திருக்கும் என்று மீனாவுக்கு அடிபட்டதை சொல்லுகிறார். இதனால் பதட்டமான மீனாவின் அம்மா, சத்யா வந்ததும் நடந்த விஷயத்தை சொல்லி திட்டுகிறார்.

திருந்திய மீனாவின் தம்பிக்கு ஏற்பட போகும் அவமானம்

உடனே அக்கா பாசத்தில் சிட்டியிடம் சண்டை போட சத்தியா சிட்டியை பார்க்க போய்விட்டார். நீங்கள் என்ன இருந்தாலும் என் அக்காவே அடித்து கீழே தள்ளினது தப்புதான். இதற்கு மேலேயும் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் இங்கே வர மாட்டேன், இனி என்னை தேடி நீங்களும் வராதீங்க என்று திட்டிவிட்டு சத்தியா ஆஸ்பத்திரிக்கு மீனாவை பார்க்க போகிறார்.

அங்கே மீனாவை பார்த்ததும் சத்தியா இனிமேல் நான் சிட்டியை பார்த்து பேச மாட்டேன்.நீ ஆசைப்பட்ட மாதிரி காலேஜுக்கு நல்லாபடியாக போயிட்டு நல்லா படிப்பேன் என்று சொல்கிறார். இதை பார்த்த முத்து என் பொண்டாட்டிக்கு அடிபட்டதுக்கு அப்புறம் தான் திருந்துவியா என கேட்கிறாரு. ஒரு வழியா எப்படியோ சத்யா திருந்திட்டார், இனி பிரச்சினை இல்லை என்று நினைத்தால் இப்பொழுது தான் பிரச்சனை பூதகரமாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதாவது ரோகினியை அந்த பிளாக் மெயில் நபர் மிரட்டி 30 லட்சம் ரூபாய் பணத்த கேட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி, லோக்கல் ரவுடி சிட்டியை பார்த்து அந்த நபர் என்னுடைய வழியில் வராதபடி என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா இனி அவருடைய தொந்தரவு எனக்கு இருக்க கூடாது என்று உதவி கேட்கிறார்.

லோக்கல் ரவுடி சிட்டி இதுதான் சான்ஸ் என்று நீங்கள் கேட்டபடி நான் உங்களுக்கு உதவி பண்ணுகிறேன். ஆனால் எனக்கு அதற்கு பதிலாக முத்து போனில் ஒரு வீடியோ இருக்கிறது. அந்த வீடியோவை நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். நீங்கள் செய்துவிட்டால் உங்களை தொந்தரவு பண்ணும் அந்த நபர் இருக்கும் இடம் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிட்டி சொல்கிறார்.

உடனே ரோகினி அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க மாமியாரிடமிருந்து ஒருவன் பணத்தை திருடிட்டு போனது வேறு யாரும் இல்லை மீனாவின் தம்பி சத்யா தான். அந்த வீடியோ தான் முத்துவிடம் இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வெளியே வந்து விட்டால் என்னுடைய காரியம் நான் நினைத்தபடி நடந்து விடும். இது நீங்கள் செய்து கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் கேட்டபடி நான் பண்ணுகிறேன் என்று லோக்கல் ரவுடி சிட்டி, ரோகினிடம் டிமாண்ட் பண்ணுகிறார்.

அதற்கு ரோகிணி இத்தனை நாள் விட்டுட்டு ஏன் இப்பொழுது கேட்கிறீர்கள் என்று கேட்கிறார். அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது. நீங்கள் இதை பண்ணினால் நான் உங்களுக்கு ஏற்ற மாதிரி அந்த பிளாக்மெயில் பண்ணும் நபரை உங்கள் பக்கம் வராதபடி பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார்.

ரோகிணிக்கும் வேறு வழி இல்லாததால் லோக்கல் ரவுடி சிட்டி கேட்டபடி வீட்டுக்கு போனதும் யாருக்கும் தெரியாமல் முத்து மொபைலில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பிவிடுவார். அப்பொழுது ஊர் முழுவதும் பார்த்து சத்தியா ஒரு திருடன் என்ற முத்திரை குத்தப்படும். அதோட விடாமல் விஜயா இன்னும் உன் தம்பி திருட்டுத் தொழிலை விடலையா என்று கேட்டு மீனாவை அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்புவதற்கும் ஒரு வாய்ப்பாக கிடைத்துவிடும்.

இத்தனை நாள் விட்டுட்டு மாப்பிள்ளை இந்த வீடியோவை இப்பொழுது இப்படி அனுப்பி வைத்திருக்கிறார் என்று மீனாவின் குடும்பத்தில் இருப்பவர்களும் முத்து மீது கோபப்பட போகிறார்கள். அத்துடன் சத்யாவும் முத்து மீது இருக்கும் கோபத்தில் லோக்கல் ரவுடி சிட்டி இடம் மறுபடியும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் மீனா மற்றும் முத்துவிற்கு இடையே விரிசல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News