புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சும்மா இருந்த முத்துவை சீண்டி விட்ட ரோகினி.. திரும்புற இடமெல்லாம் கல்யாணிக்கு இனி கன்னிவெடி தான்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி ஏதோ பொய் சொல்லி ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுகிறார் என்ற சந்தேகம் முத்துவுக்கு வந்துவிட்டது. அதனால் ரோகிணி என்ன பொய் சொல்கிறார்? எந்த விஷயத்தை மறைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து CID வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் ரோகினிக்கு விரித்த வலை தான் மலேசியாவுக்கு குடும்பத்துடன் போகலாம் என்ற ட்ராமா. ஆனால் இது டிராமா என்று தெரிந்து கொள்ளாத ரோகினி, முத்துவையும் குடும்பத்தையும் மலேசியாவுக்கு போகாமல் தடுக்க வேண்டும் என்று பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் மனோஜை ஒரு ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி மனோஜ் மூலம் காரியத்தை சாதிக்கலாம் என்று நினைத்தார்.

ஆனால் மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் பண்ணி விஜயாவிடம் பேசினாலும் அது எதுவும் சரிப்பட்டு வராதபடி முத்து மீனா, விஜயா மனசை குழப்பி விட்டார்கள். அத்துடன் மனோஜ் வந்து பேசியதால் இன்னும் அதிகமாகவே முத்துவுக்கு ரோகினி மீது சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் நிச்சயம் நம் அனைவரும் மலேசியாவுக்கு போகாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக இதைவிட ஏதாவது ஒரு டிராமாவை போடுவார் என்று முத்து மீனாவிடம் சொல்கிறார்.

அந்த வகையில் முத்து யோசித்த மாதிரி ரோகிணி, பிரவுன் மணியை வித்யா வீட்டிற்கு வரச் சொல்லி மலேசியா கதைக்கு ஒரு முடிவு கட்டலாம் என்று பிளான் போட்டு விட்டார். அதாவது ஜெயிலில் இருக்கும் என்னுடைய அப்பாவின் விரோதிகள் ஜெயிலுக்குள் வைத்து என்னுடைய அப்பாவை கொன்று விட்டதாக குடும்பத்தில் வந்து சொல்லி யாரும் அங்கே போக வேண்டாம். நீயும் அங்கே போகாதே என்று செண்டிமெண்டாக சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து விடுங்கள்.

அதன் பிறகு மத்ததெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் இதுதான் நம் போடுகிற கடைசி டிராமாவாக இருக்கும் என்று ரோகிணி, பிரவுன் மணியிடம் கெஞ்சுகிறார். உடனே பிரவுன் மணியும் சரி என்று சொல்லிய நிலையில் முத்து வீட்டிற்கு வந்து ரோகிணி எப்படி சொல்லிக் கொடுத்தாரோ அதே மாதிரி ஒரு பொய்யை சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி ரோகினியும் அப்பா இறந்து போய் விட்டதாக நினைத்து அழுது ஒரு டிராமாவை போடுகிறார்.

பிறகு வீட்டில் இருப்பவர்களும் மலேசியா போக வேண்டாம் டிக்கெட்டை கேன்சல் பண்ணிவிடு என்று முத்துவிடம் சொல்லிவிடுகிறார். ஆக மொத்தத்தில் ரோகினி நினைத்தபடி யாரும் மலேசியாவுக்கு போகாதபடி தடுத்து விட்டார். ஆனால் இங்கே தான் முத்துவின் சூட்சமம் இருக்கிறது, அதாவது எப்படியும் மலேசியாவுக்கு நாம் யாரும் போக மாட்டோம். இந்த பார்லர் அம்மாவும் நம்மளை போக விடாது. ஏதாவது தில்லாலங்கடி வேலையை பார்க்கும் என்று முத்து யோசித்து வைத்திருந்தார்.

ஆனால் அப்பா இறந்து போய்விட்டதாக சொல்லும் அளவிற்கு ரோகினி ஒரு பொய் சொல்கிறார் என்றால் அதைவிட ஏதோ ஒரு விஷயம் மறைந்திருக்கிறது என்ற விஷயத்தை உறுதியாக முத்துக்கு தெரிந்து விட்டது. சும்மாவே முத்து சலங்கை இல்லாம ஆடுவாரு, இப்போ அதற்கு ஏற்ற மாதிரி முத்து விரித்த வலையில் ரோகிணி தானாகவே மாட்டிக் கொண்டார். இதுதான் ரோகினி திரும்பும் இடமெல்லாம் கன்னிவெடியாக இருக்கப் போகிறது என்பதற்கு ஏற்ப ரோகிணி மற்றும் கல்யாணியின் முகத்திரைகள் கிழிய போகிறது.

Trending News