Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி மற்றும் ஸ்ருதியின் முதல் வருட கல்யாண நாள் நல்லபடியாக முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து மீனா நம்ம வாழ்க்கைக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆகும் எனக்கு ஒரு அக்காவாகவும் இருந்து நல்வழிப்படுத்துகிறார் என்ற உணர்வில் சுருதி, மீனாவுக்கு ஒரு கிப்ட் கொடுக்கிறார்.
உடனே மீனா, உங்க கல்யாண நாளுக்கு நாங்க தான் கிப்ட் கொடுக்கணும் நீங்க என்ன எனக்கு கொடுக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு சுருதி கிப்ட் யாருக்கு எப்ப வேணாலும் கொடுக்கலாம். நம்மளுக்கு பிடித்தவர்கள் நம் மீது அக்கறை வைத்திருப்பவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்க வேண்டும்.
அதனால் என்னுடைய அக்காவாக உங்களை நினைத்து நான் ஒரு சின்ன கிஃப்ட் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொடுக்கிறார். இதனை பார்த்த மனோஜ், ரோகினிடம் நாம்தான் அவர்களுக்கு பெரிய கிப்டாக மோதிரம் கொடுத்தோம். நமக்கு ஒண்ணுமே குடுக்கல மீனா வெறும் பூ மட்டும் தான் கொடுத்தார்.
அவளுக்கு பேய் கிப்ட் கொடுக்கிறார்கள் என்று புலம்புகிறார். அதற்கு ரோகிணி அந்த அளவுக்கு சுருதி மனதில் மீனா இடம் பிடித்து வைத்திருக்கிறார் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா அந்த கிப்ட் ஓபன் பண்ணி பார்த்ததும் விலை உயர்ந்த மொபைல் அதில் இருக்கிறது.
உடனே மீனா எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய போன் என்று கேட்ட நிலையில் சுருதி, நீங்க இப்பொழுது பிஸ்னஸ் பண்ண ஆரம்பித்து விட்டீர்கள். அதனால் நிச்சயம் ஸ்மார்ட் போன் உங்களுக்கு வேணும். இதை வைத்துக் கொள்ளுங்கள் என்னுடைய சின்ன அன்பளிப்பு என்று சொல்லிக் கொடுக்கிறார்.
இதை பார்த்த விஜயாவுக்கு வயிற்றெச்சல் தாங்க முடியவில்லை. பூக்கட்டும் வேலைக்காரிக்கு இவ்ளோ பெரிய கிஃப்ட் என்று புலம்புகிறார். அதற்கு அண்ணாமலை நீ மட்டும் தான் மீனாவை குறைச்சலாக நினைக்கிறாய். ஆனால் மீனாவின் அருமையும் பெருமையும் எல்லாத்துக்கும் தெரிகிறது என்று சொல்லி நீயும் மாறிவிடு என அட்வைஸ் பண்ணி போகிறார்.
ஆனாலும் இந்த விஜயா திருந்தாமல் மீனாவை வீட்டு வேலைக்காரியாக தான் நடத்தப் போகிறார். அடுத்ததாக ரோகினி, சிட்டியை சந்தித்து சத்யாவின் வீடியோவை வெளியிட்டது நான் இல்லை என்று முத்து நம்புகிறார். இதனை அடுத்து உன் மீது தான் சந்தேகம் வரும் அதனால் கொஞ்சம் உசராக இரு என்று சொல்கிறார். அதற்கு சிட்டி நான் பார்த்துக் கொள்கிறேன் என ரோகிணி இடம் சொல்கிறார்.
இந்த ரோகினியும் நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ ஆனால் நான் மாட்டிக் கொள்ளாதபடி நீ உஷாராக இரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். ரோகிணி பொறுத்தவரை எத்தனை பொய் சொன்னாலும் கடைசியில் ஒரு மன்னிப்பு கேட்டு விட்டால் சரியாகிவிடும் என்ற நினைப்பில் மனோஜை கூமுட்டையாகி விஜயா குடும்பத்தை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிறார்.
கடைசி ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளியே வந்தாலும் மன்னிப்பு கேட்டு நீலி கண்ணீர் வடித்து அனைவரும் மனதையும் மாற்றி ரோகிணி நல்லவள் என்பதை உணர்த்தும் வகையில் தான் கதை நகரப் போகிறது.
அடுத்ததாக முத்துவுக்கும் டிராபிக் போலீசுக்கும் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து டிராபிக் போலீஸ் மீனாவின் தங்கை சீதாவின் வாழ்க்கைக்குள் வரப் போகிறார். அதாவது டிராபிக் போலீஸ் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வருகிறார். அப்பொழுது அவருக்கு அவசரமாக வேலை இருக்கிறது என்பதால் அம்மாவையும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று தவிக்கிறார்.
இதனை பார்த்த சீதா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல இரண்டு பேரும் நல்லா பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து இவர்களுடைய உறவு காதலில் போய் முடிய போகிறது. இது தெரியாத முத்து, ஹோட்டலுக்கு சாப்பிட வரும் டிராபிக் போலீஸ் வம்புக்கு இழுக்கும் விதமாக அவரை சீண்டி பார்க்கிறார். இதனால் கோபப்பட்ட அந்த டிராபிக் போலீஸ் முத்துவின் சட்டையை பிடித்து பிரச்சனை பண்ண ஆரம்பிக்கிறார்.