சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கொலுவில் தில்லு முல்லு வேலையை பார்க்கப் போகும் ரோகிணி.. முத்துவிடம் இருந்து ஆதாரத்தை திருடப் போகும் வித்தியா

Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா நினைத்தபடி கொலுவை வீட்டில் நல்லபடியாக வைத்து விட்டார். இதில் முதல் ஆளாக கலந்து கொள்வதற்கு ரோகிணியின் தோழி வித்தியாவும் வந்துவிட்டார். அத்துடன் விஜயாவின் தோழி பார்வதி மற்றும் பரதநாட்டியத்தில் சேர்ந்த மாணவர்கள் என அனைவரும் வந்து விட்டார்கள்.

அத்துடன் கொலுவுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நல்லபடியாக முடிந்த நிலையில் பூஜை செய்யப்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது விஜயா பாட்டுக்கு நான் அடிமை என்பதற்கு ஏற்ப விஜயாவை பாட சொல்லி அண்ணாமலை ரசித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் மற்றவர்கள் யாரும் விஜயா பாடும் வில்லுப்பாட்டை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சகித்துக் கொண்டார்கள்.

ரோகிணியின் ரகசியம் வெளிவர நேரம் வந்துவிட்டது

இருந்தாலும் இந்த அண்ணாமலை ஒன்ஸ்மோர் கேட்டு விஜயாவை பாட சொல்லிக்கிட்டே ரசிக்க ஆரம்பித்து விட்டார். பிறகு இதற்கு முடிவே இல்லையா என்பதற்கு ஏற்ப சாமி பாடல்களை மீனா பாடி மற்றவர்களை அசத்தி விட்டார். இதற்கிடையில் முத்து மற்றும் மீனாவின் ரொமான்ஸ் மற்றும் புரிதல் எல்லாமே நிறைவாக அமைந்தது.

ஆனால் இந்த ஒரு கொலு விஷயத்தை வைத்து ரோகினி, முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுத்து விட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதற்காக வித்யாவிடம் சேர்ந்து பிளான் பண்ணி தில்லு முல்லு வேலையை பார்க்க போகிறார். அந்த வகையில் கொலுவில் பாட்டு போடுவதற்காக முத்துமிடமிருந்து போன் வாங்கி வித்தியா சாமி பாட்டு போடுவார்.

அப்பொழுது நைசாக முத்து ஃபோனில் இருக்கும் மீனாவின் தம்பி திருடிய வீடியோவை ரோகிணியின் தோழி வித்தியா ஆட்டைய போட்டு விடுவதற்கு பிளான் பண்ணி இருக்கிறார். ஆனால் இது எதுவும் நடக்காத படி அங்க சில குழப்பங்கள் மற்றும் ஸ்ருதியால் முத்து இந்த விஷயத்தில் எஸ்கேப் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.

அதற்கு பதிலாக இந்த கொலுவில் ரோகினி மாட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்த பூஜைக்கு கிரிஷ் மற்றும் பாட்டியை கூட்டிட்டு வரலாம் என்று முத்து மீனா முடிவெடுக்கப் போகிறார்கள். அந்த வகையில் எப்படியாவது மீனா, கிரிஷை கூட்டிட்டு வீட்டிற்கு வந்து விடுவார். இதன் மூலம் ரோகினி சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News