வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

மனோஜ் விஜயா முகத்தில் கரியை பூச போகும் ரோகிணி.. அருண் மீது காதலில் விழுந்த சீதா, அதிர்ச்சியில் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவை பொருத்தவரை அவங்களோட பிரச்சனையை சரி பண்ண முடியாத நிலையில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் முதல் ஆளாக உள்ளே புகுந்து அவர்களுக்கு இருக்கும் சிக்கல்களை தீர்த்து விடுவார்கள். அப்படித்தான் அண்ணாமலையின் நண்பர் பரசுராமன் மகள் காதலித்த பிரச்னையை சுமுகமாக்கி விட்டார்கள்.

அந்த வகையில் பரசுராமன், அண்ணாமலை வீட்டிற்கு வந்து கல்யாணத்திற்கு கூப்பிட ஆரம்பித்து விட்டார். அத்துடன் முத்து மீனாவை உயர்த்தி பேசி நீங்கள் தான் இந்த கல்யாணத்தை முன்ன நின்று பண்ணி வைக்க வேண்டும். எல்லா பிரச்சனையும் சரி செய்து என்னுடைய கௌரவத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றியது முத்து மீனாதான். இவர்களுக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டு இருப்பேன் என்று பரசுரமன் பெருமைப்படுத்திவிட்டார்.

ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா, வழக்கம் போல் மீனாவை கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனாலும் கண்டுகொள்ளாத முத்து, மீனா உங்க மகள் கல்யாணத்தில் பூ டெக்கரேஷன் வேலை எல்லாம் பார்த்து விடுவார். என்னுடைய கார் சொந்தகாரங்களையும் மாப்பிள்ளையும் கூட்டிட்டு வர நான் ஏற்பாடு பண்ணுகிறேன்.

பொண்ணுக்கு மேக்கப் பண்ணுவதற்கு ரோகிணி பண்ணிடுவாங்க என்று முத்து எல்லாத்தையும் பேசி முடிக்கிறார். அத்துடன் ரவியும் நானும் என்னுடைய பங்குக்கு ஸ்பெஷல் ஸ்வீட் பண்ணி தருகிறேன் என்று பரசுராமன் மனசை குளிர வைத்து விட்டார். ஆனால் விஜயா ஆக மொத்தத்தில் ஓசிலையே உங்க பொண்ணு கல்யாணத்தையே முடிச்சு வைக்க போறீங்க என்று பரசுராமன் மனசையும் காயப்படுத்தி பேசி விட்டார்.

இதையெல்லாம் பார்த்து ரோகிணியும் மனோஜும் நக்கல் அடிக்கிறார்கள். ஆனால் ரோகிணி பற்றிய விஷயம் வெளியே வரும் பொழுது தான் மனோஜ் மற்றும் விஜயாவுக்கு பெரிய ஏமாற்றம் இருக்கப் போகிறது. இதுவரை தலையில் மிளகாய் அரைத்த ரோகிணி விஜயா மனோஜ்க்கு கரிய பூசும் வகையில் அனைத்து ரகசியங்களும் கசாப்பு கடை மணி மூலம் முத்து வெளி கொண்டு வந்து விடுவார்.

அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதற்கு தான் பரசுராமனின் மகள் கல்யாணம் ஒரு அச்சாணியாக இருக்கப்போகிறது. அடுத்ததாக டிராபிக் போலீஸ் அருண் வீட்டிற்கு மீனாவின் தங்கை சீதா வருகிறார். அப்பொழுது அருணின் அம்மாவிடம் சீதா அக்கறையாக பேசுகிறார். ஆனால் அருண் அம்மா சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் ஏன் என்னாச்சு என்று கேட்கிற பொழுது அருணுக்கு ஏதோ பிரச்சனை அதான் ரூமில் போய் இருக்கிறார் என்று சொல்கிறார்.

உடனே அருணை சந்தித்து பேசும் சீதா என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அப்பொழுது அருண் என்னுடைய கேரியரில் இதுவரை நான் எங்கேயும் ஒரு பிளாக் மார்க் கூட வாங்கவே இல்லை. ஆனால் இப்பொழுது ஒருத்தன் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக செய்த விஷயத்தை எனக்கு மூன்று நாள் சஸ்பெண்ட் கிடைத்துவிட்டது என்று சொல்கிறார். அப்பொழுது இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக சீதா பேசிய நிலையில் இருவர் மனதிலும் காதல் மலர போகிறது.

இவர்களுடைய காதல் விஷயம் முத்து மற்றும் மீனாவுக்கு தெரிய வரும்போது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போகிறது. ஆனால் அதற்குள் முத்துவுக்கும் அருணுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளும் மோதல்களும் நடைபெறப் போகிறது. இதையெல்லாம் கடந்து சீதா ஆசைப்படுகிறார் என்ற காரணத்திற்காக மீனா மற்றும் முத்து இவர்களுடைய கல்யாணத்தை நடத்தி வைத்து ட்ராபிக் போலீஸ் அருனுடன் சுமூகமான ஒரு உறவை ஏற்படுத்தி கொள்வார்.

Trending News