சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அட்ராசக்க, ரோகினி கண்ணில் விரலை விட்டு ஆட்டும் முத்து.. 30 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்த மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு தொழிலதிபராக வளர்ந்து விட்டோம் என்ற மமதையிலிருந்த மனோஜ் ஒட்டுமொத்தமாக ஏமாறக்கூடிய தருணம் வந்துவிட்டது. ரோகிணி என்ன சொன்னாலும் அதை கண்முடித்தனமாக நம்பி வந்த மனோஜ் தற்போது வீடு வாங்குவதற்கு தயாராகிவிட்டார்.

அந்த வகையில் ரோகினி மற்றும் மனோஜின் பேராசையால் அந்த வீட்டைப் பற்றியும் அதை விற்கக் கூடியவரை பற்றியும் எந்தவித விசாரணையும் இல்லாமல் அட்வான்ஸாக 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டார்கள். அடுத்ததாக அந்த ஏமாற்று கும்பல் சொன்னபடி மனோஜ் அவருடைய மொத்த குடும்பத்தையும் வாங்கக்கூடிய புது வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்.

அதன்படி அண்ணாமலை, விஜயா, ரவி, ஸ்ருதி, மனோஜ் மற்றும் ரோகிணி முதலில் வந்து விட்டார்கள். அவர்கள் வந்ததும் அந்த ஏமாற்றும் கும்பல் இடம் மீதமுள்ள 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டார்கள். அவர்களும் இதுதான் எஸ்கேப் ஆகுவதற்கான சரியான நேரம் என்று பணத்தை எல்லாம் எடுத்து சுருட்டிக்கொண்டு காரில் கிளம்புவதற்கு அவசரமாக வெளியே வந்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் முத்து மற்றும் மீனா காரில் வருகிறார்கள். அப்படி வரும் பொழுது இரண்டு காரும் கொஞ்சம் மோதிய நிலையில் முத்து அந்த கார் டிரைவரிடம் பிரச்சினை பண்ணுகிறார். உடனே ஏமாற்றிய அந்த நபர் முத்துவை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்டு விட்டு போய்விட்டார். உள்ளே இருந்து வந்த மனோஜ், நீ வந்த உடனேயே அவரிடம் ஏன்டா பிரச்சனை பண்ணுன.

அவர்தான் இந்த வீட்டு ஓனர் எனக்காக கம்மி பணத்தில் கொடுத்து இருக்கிறார் என்று மனோஜ், முத்துவிடம் சொல்கிறார். என்னது இவர்தான் ஓனரா, இவ்வளவு பெரிய வீட்டுக்கு சொந்தக்காரர் என்று சொல்லுகிறாய். அப்புறம் ஏன் வாடகை காரில் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று முத்து, மனோஜிடம் கேட்கிறார். உடனே மனோஜ்க்கும் ஒரு சின்ன சந்தேகம் வந்துவிட்டது.

ஆனால் ரோகிணி, விஜயா மற்றும் மனோஜ், முத்து சொல்வதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஜோசியக்காரரை வரவைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய மூன்று பெயரையும் சேர்த்து ரோமையா என்று சொல்லிய நிலையில் ஒட்டுமொத்த சந்தோசத்துடன் விஜயா சந்தோசமாக கத்த ஆரம்பித்து விட்டார்.

ஆனால் முத்துவுக்கு மட்டும் அந்த ஓனர் மீதும், இந்த வீட்டு மீதும் சந்தேகம் வந்துவிட்டது. எங்கே மனோஜ் யாரிடமும் ஏமாந்த பேய் விடுவானோ என்ற பயத்தில் நல்ல விசாரிக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி, முத்துவை அலட்சியப்படுத்தும் விதமாக பேசியதால் மீனா முத்துவை கண்ட்ரோல் பண்ணி விட்டார். இதனை அடுத்து அந்த வீட்டின் ரிஜிஸ்ட்ரேஷன் விஷயமாக ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு ரோகிணி மற்றும் மனோஜ் போகிறார்கள்.

அதே ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு கனடாவில் இருந்து வந்த ஜீவாவை பிக்கப் பண்ணிட்டு முத்து ட்ராப் பண்ணுவதற்கு போகிறார். அப்பொழுது மனோஜ் ரோகினி மற்றும் ஜீவா அனைவரும் சந்தித்த நிலையில் ஜீவா கடுப்பாகி காருக்குள் வந்து நான் யாரை பார்க்க கூடாதுன்னு நினைச்சேனோ அவங்கள பார்த்து தொலைச்சுட்டேன் கடுப்பாக இருக்கிறது என்று புலம்புகிறார்.

இதைக் கேட்ட முத்து உங்களை யார் ஏமாற்றினார் என்று காட்டுங்கள் என கேட்ட நிலையில் ஜீவா, ரோகிணி மற்றும் மனோஜை கைகாட்டி விடுகிறார். ரோகிணி மற்றும் மனோஜை பார்த்த நிலையில் அதிர்ச்சியான முத்து இவங்க என்ன பண்ணுனாங்க என்று ஜீவாவிடம் கேட்கிறார். அப்பொழுது ஜீவா நடந்த உண்மையை சொல்லி 30 லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டார்கள் என்று சொல்லியதும் முத்துவுக்கு அனைத்து உண்மையும் தெரிய வந்துவிடும்.

ஆக மொத்தத்தில் இந்த விஷயத்திலும் ரோகிணி மனோஜ் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள், வீடு விஷயத்திலும் ஏமாந்து போயி மனோஜ் முழிக்க போகிறார். இனி தான் முத்துவின் ஆட்டம் இருக்கிறது என்பதற்கு ஏற்ப ரோகிணி கண்ணில் விரலை விட்டு ஆட்டப் போகிறார்.

Trending News