சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வீடு வாங்க அட்வான்ஸ் பணத்தை கொடுக்கப் போகும் ரோகிணி மனோஜ்.. வேண்டாம்னு தடுக்கும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து போன் பண்ணவில்லை, எங்கே போறேன்னு சொல்லவில்லை என்ற பதட்டத்துடன் மீனா எல்லா பக்கமும் தேடி பார்த்துட்டு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் முத்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பதால் முத்து போகும் இடத்தில் போய் விசாரித்து பார்க்கிறார்.

அப்பொழுது செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியை மட்டும் பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு முத்து கிளம்பி இருக்கிறார். உடனே மீனா என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார், எங்கே போறனாவது போன் பண்ணி சொல்லி இருப்பார். இன்னைக்கு ஏன் இப்படி பண்ணியிருக்கிறார் என்று தெரியவில்லை என சத்யாவிடம் மீனா புலம்புகிறார்.

இத கேட்டதும் சத்தியா, மாமா ஒருவேளை குடிக்கிறதுக்கு போனாலும் போயிருப்பார். அதனால ஒயின்ஷாப்பில் போய் பார்க்கலாம் என்று மீனாவை கூட்டிட்டு சத்தியா போகிறார். அப்படி போன இடத்தில் கடைக்குள் போய் பார்க்கிறார் ஆனால் முத்து அங்கு இல்லை என்றதும் சத்யா திரும்ப மீனாவை கூட்டிட்டு வீட்டில் வந்து விடுகிறார். விடும்பொழுது மாமா ஏதாவது சவாரிக்கு போயிருப்பாரு, போன இடத்தில் சார்ஜ் இல்லாமல் இருந்திருக்கும்.

இப்போ நீ வீட்டுக்கு போனா ஒருவேளை மாமா வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீ எதையும் நினைத்து கவலைப்படாம போ என்று சொல்லி சத்யா கிளம்பி விடுகிறார். வீட்டுக்குள் போன மீனா, அண்ணாமலையை பார்த்ததும் அவர் வந்துட்டாரா போன் பண்ணாரா என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை எனக்கும் போன் பண்ணவில்லை, செல்வத்துக்கு போன் பண்ணி கேட்டேன் அவனுக்கு போன் பண்ண வில்லை என்று சொல்கிறார்.

பிறகு மீனா அடுப்பாங்கரையில் இருக்கும் வேலையெல்லாம் முடித்துவிட்டு முத்து இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து, அப்பா என்று சொல்லி வீட்டிற்குள் வந்து விடுகிறார். உடனே அண்ணாமலை எங்கே போவதாக இருந்தாலும் மீனாவிடம் சொல்லாமல் ஏன் போனாய். பாவம் மீனா ரொம்பவே பதட்டம் அடைந்து விட்டாள். அவளிடம் பேசி சமாதானப்படுத்து என்று சொல்லி போய் விடுகிறார்.

உடனே முத்து, மீனாவிடம் சவாரிக்கு போயிட்டு வந்த பணத்தை கொடுக்கிறார். இதை சம்பாதிப்பதற்காகத்தான் என்னிடம் சொல்லாமல் போனீங்களா என்று கேட்கிறார். ஆமாம் நீ தானே நேத்து சொன்ன உங்களை விட அதிகமாக நான் சம்பாதித்து விட்டேன் என்று. அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது அதனால் தான் சவாரிக்கு போனேன். இப்பொழுது நானும் அதற்கேற்ற மாதிரி சம்பாதித்து விட்டேன் என்று பணத்தை கொடுக்கிறார்.

இது கேட்டதும் மீனா, அப்படி என்றால் என் மேல இருக்கும் கோபத்தினால் தான் என்னிடம் பேசாமல் போனீங்களா என்று கோபப்பட்டு அழ ஆரம்பித்து விட்டார். பிறகு ஒரு வழியாக முத்து, மீனாவை சமாதானம் படுத்தி விட்டார். ஆக மொத்தத்தில் மனைவி சம்பாதிக்க வேண்டும் ஆனால் கணவனை விட அதிகமாக சம்பாதித்து விட்டால் இப்படித்தான் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விடு போல. அடுத்ததாக மீனா அவருடைய அம்மாவை கூட்டிட்டு கோயிலுக்கு போகிறார். அதே கோயிலுக்கு ரோகினி மற்றும் மனோஜ் வந்திருக்கிறார்கள்.

உடனே மீனா, ரோகிணியை பார்த்து என்ன திடீர்னு கோவிலுக்கு வந்திருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி ஒரு வீடு வாங்க போறேன்னு சொல்லியிருந்தோம் தானே, அதற்கு அட்வான்ஸ் பணத்தை வாங்குவதற்கு ஓனர் இந்த கோவிலுக்கு தான் வர சொன்னார். இன்னைக்கு அவரை பார்த்து அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விடுவோம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் மீனாவும் சரி என்று சொல்லி அம்மாவை கூட்டிட்டு கிளம்புகிறார்.

அப்பொழுது ரோகிணி அட்வான்ஸ் பணத்தை கொடுக்கும் பொழுது அங்கே நிற குடம் இருப்பதை கவனிக்காமல் தட்டி விடுகிறார். இதை பார்த்ததும் மீனாவின் அம்மா, ரோகிணி செய்யப் போகும் நல்ல காரியத்திற்கு இது ஒரு அபசகுனமாக தெரிகிறது. அதனால் இன்னைக்கு வேண்டாம் இன்னொரு நாள் கொடுக்கலாம் என்று சொல்லு என மீனாவிடம் சொல்கிறார்.

மீனாவும் அம்மா பேச்சைக் கேட்டு ரோகினிடம் இன்னைக்கு அட்வான்ஸ் பணத்தை கொடுக்க வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனால் ரோகிணி மற்றும் மனோஜ் மீனாவின் பேச்சை கேட்காமல் அந்த கும்பல் இடம் பணத்தை கொடுத்து விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் யார் சொன்னாலும் கேட்காத ஜென்மங்கள் தான் என்று ஏமாந்து நிற்கும் போது தான் அவர்களுக்கே புரியும்.

Trending News