ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரோகினி மலேசியா பொண்ணே இல்ல, உண்மையை கண்டுபிடித்த முத்து மீனா.. விஜயா கொடுக்கப் போகும் சவுக்கடி

Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு உரிமையாளராக இருக்கும் நீத்து, ஹோட்டல் வளர்ச்சிக்காக பொங்கல் தினத்தை முன்னிட்டு பாரம்பரியமான கிராமத்து விளையாட்டை மக்களிடம் கொண்டுவந்து சேர்க்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார். அந்த வகையில் ரவியின் குடும்பத்தில் இருப்பவர்களும் பங்கு பெற வேண்டும் என்று ரவி வீட்டில் இருப்பவர்களை கூப்பிட்டு போகிறார்.

இந்த சமயத்தில் பாட்டியும் பொங்கலை கொண்டாடுவதற்காக முத்து வீட்டுக்கு வந்து விட்டார். இதனை அடுத்து அனைவரும் சேர்ந்து பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக ரவி ஹோட்டலில் ஏற்பாடு பண்ணும் விளையாட்டுகளில் பங்கு பெற போய்விட்டார்கள். அப்படி பங்கு பெறும் பொழுது சுருதி ரோகிணி மற்றும் மீனா மூன்று பேரும் கலந்து கொள்கிறார்கள்.

இதில் சுருதி, பழக்கம் இல்லாத தண்ணீர் குடத்தை தலையில் வைத்து தூக்கிட்டுப் போக வேண்டும் என்பதால் அதை தவற விட்டு விடுகிறார். கடைசியில் ரோகினி மற்றும் மீனா இருவரும் போட்டியை தொடர்கிறார்கள். ஆனால் இதில் ஜெய்ப்பது ரோகிணியாகத் தான் இருக்கும், ஆனால் இங்கேதான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. அதாவது மலேசியாவில் பிறந்து வளர்ந்த பொண்ணுக்கு எப்படி தலையில் கை வைக்காமல் தண்ணீர் குடத்தை எடுத்துட்டு போக முடியும்.

இதில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது என்று முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏற்கனவே ரோகிணி மலேசியா பொண்ணு என்று பொய் சொல்லிக் கொண்டு ஏமாற்றுகிறார் என்று முத்துவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது ஊர்ஜிதம் ஆகும் அளவிற்கு ரோகினி நடவடிக்கைகள் இருப்பதால் ரோகிணியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதில் முத்துவும் மீனாவும் உறுதியாக முடிவெடுத்து விட்டார்கள்.

அந்த வகையில் ரோகிணியை ஆதாரத்துடன் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ரோகிணியின் அப்பாவை மலேசியாவுக்கு போய் சந்தித்து பேசலாம் என்று முத்து ஒரு பிளான் போடுகிறார். அதன்படி வீட்டில் இருப்பவர்களிடம் வந்து சொல்லி மலேசியாவுக்கு போவதற்கு ஏற்பாடுகளை துவங்கி விட்டார். இதை தெரிந்துகொண்ட ரோகினி, முத்துவை தடுக்க வேண்டும் என்பதற்காக மனோஜிடம் எங்க அப்பா ஜெயலில் இருக்கும் பொழுது நீங்க போய் பார்த்து பேசினால் எங்க அப்பாக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

எனக்கும் அது சரியாக படவில்லை, அதனால் நீங்கள் தான் உங்க குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி மலேசியாவுக்கு போக விடாமல் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி மனோஜ், ரோகினி அப்பாவை சந்தித்து பேசுவதற்கு யாரும் போக வேண்டாம் என்று சொல்கிறார். உடனே முத்து மற்றும் மீனா, மனோஜ் இப்படி சொல்வதற்கு பின்னணியில் ரோகினி தான் காரணமாக இருப்பார்.

அதனால் இந்த முறை சான்சை மிஸ் பண்ணவே கூடாது என்பதற்காக மீனா, ஒரு சம்மந்தி ஜெயிலில் இருக்கிறார் என்று தெரிந்தும் நம் குடும்பத்தில் இருந்து பார்க்க போகவில்லை என்றால் அது தவறாக இருக்கும். இதுவே அவர்களுக்கு நம் குடும்பத்தின் மீது வெறுப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று விஜயா மனசை குழப்பி விடுகிறார். உடனே விஜயா, யார் என்ன சொன்னாலும் சரி நாம் ரோகிணி அப்பாவை சந்தித்து பேச வேண்டும். அதற்கு மலேசியா போக வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.

எங்க திரும்பினாலும் நமக்கு கன்னிவெடியாக இருக்கிறது என்று முழித்துக் கொண்டிருக்கும் ரோகிணிக்கு இனி ஒவ்வொரு நாளும் சவுக்கடி தான் என்பதற்கு ஏற்ப விஜயா மாஸ் காட்டப் போகிறார். அதிலும் இனி ஒரு மணி நேரம் எபிசோடு என்பதால் நிச்சயம் ரோகினி சிக்க போவது உறுதியாகிவிட்டது.

Trending News