புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

முத்து மீனாவை வீட்டை விட்டு அனுப்ப பிளான் பண்ணும் ரோகினி.. மருமகளுக்கு ஏத்த மாமியாராக இருக்கும் விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சின்ன சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை பஞ்சாயத்து பண்ணும் அளவிற்கு பெரிய பூகம்பமாக மாறிவிடுகிறது. ரூமில் ஆரம்பிச்ச பிரச்சனை தோசை வரை நீடித்துக் கொண்டே வருகிறது. இதில் முத்து சில விஷயங்களை பண்ணும் பொழுது சுருதி மற்றும் ரோகினி ஓவராக ரியாக்ஷன் கொடுக்கிறார்கள்.

அதிலும் ரோகினி உண்மையான பணக்கார வீட்டு பெண் என்ற மெதப்பில் ஓவராக ஆடுகிறார். அத்துடன் தன் மீது முத்துவிற்கு சந்தேகம் வந்துவிட்டதால் அவரையும் மீனாவையும் எப்படியாவது வீட்டை விட்டு அனுப்பி நாங்கள் மட்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வக்கிர புத்தியுடன் சுற்றுகிறார்.

அதற்கேற்ற மாதிரி முத்துவின் அம்மா விஜயாவும், என்னுடைய இரண்டு மகன்கள் மருமகள் மட்டும் என்னுடன் இருந்தால் போதும். முத்து மீனா எனக்கு தேவை இல்லை என்று சொல்லி அவர்களை வீட்டை விட்டு அனுப்புவதற்கு பிளான் பண்ணுகிறார். ஆக மொத்தத்தில் காசு பணம் இருந்தால் போதும். சொந்தங்கள் பாசம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்பதற்கு ஏற்ப கதையை எதார்த்தமாக காட்டி வருகிறார்கள்.

Also read: மாரிமுத்து இல்லாததால் தடுமாறிப்போன எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கிய குணசேகரன்

இதுல மனோஜ் வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்லிக்கொண்டு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கிறார். இது தெரியாமல் விஜயா, மனோஜ் என்னமோ கலெக்டர் வேலை பார்க்கிற மாதிரி ஓவன் பில்டப் கொடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரோகிணியும் ஒன்னும் இல்லாத வீட்டு பெண், பார்லருக்கு சொந்தக்காரி இல்லை என்ற உண்மையும் தெரிந்து விட்டால் விஜயாவின் உண்மையான சுயரூபம் தெரியும்.

பாவம் இவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு முழிப்பது மீனா தான். வீட்டில் இஷ்டப்படி பேசிக்கொண்டு முத்து அனைவரையும் விரட்டி விடுகிறார். ஆனால் முத்து போனதுக்கு அப்புறம் அனைவரது கோபமும் மீனா மீது திரும்புகிறது. போதாக்குறைக்கு விஜயா இதுதான் சான்ஸ் என்று மாமியார் கொடுமையை காட்டி மீனாவை வேலைக்காரி மாதிரி நடத்தி வருகிறார். இதற்கெல்லாம் ஒரே தீர்வாக பேசாம முத்து மீனாவும் அவர்களே தனி குடித்தனம் போனால் சந்தோஷமாவது இருக்கலாம்.

Also read: எல்லா பிரச்சனையும் கதிர் தலையில் போட்டுட்டு எஸ்கேப் ஆகும் கோமதி.. பாக்யா நடத்தப் போகும் நாடகம்

Trending News