Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவிற்காக நடமாடும் பூக்கடையை வாங்கி வீட்டிற்கு வருகிறார். வந்ததும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தனித்தனியாக போன் பண்ணி கீழே வர வைக்கிறார். அவர்கள் வந்து பார்த்தால் மீனாவின் பெயரில் ஒரு ஸ்கூட்டர் இருக்கிறது.
பிறகு இதை யாராலும் தடுக்க முடியாது. மீனா இஷ்டப்படி பூ விற்று சம்பாதிக்கலாம். அத்துடன் மற்ற மருமகள்களை விட மீனாவின் வருமானம் தான் அதிகமாக இந்த குடும்பத்திற்கு கிடைக்கப் போகிறது என்று முத்து, விஜயாவை பார்த்து ஜாடமடையாக சொல்லிவிட்டார்.
அத்துடன் விஜயா பெயர் ராசி இல்லை அதனால் தான் மீனாவின் பெயரை வைத்துவிட்டேன் என்று மனைவியை கௌரவப்படுத்திவிட்டார். பிறகு மீனா, முத்து வாங்கி கொடுத்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு போகிறார். அங்கே பெருமையாக முத்துவை பற்றி மீனா சொல்கிறார். அதைக் கேட்டு அங்கு இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
ரோகிணியிடம் புலம்பி தவிக்கும் மனோஜ்
ஆனால் மீனாவின் தம்பி மட்டும் முத்து மீது கோபமாக இருக்கிறார். இதனை அடுத்து மனோஜ் தான் எதற்குமே லாயக்கில்லை என்று ரோகிணியிடம் புலம்புகிறார். உடனே குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்காக ரோகினி, மனோஜ் தொலைத்த 27 லட்சத்தை பற்றி கேட்கிறார்.
இதைப் பற்றி விசாரிப்பதற்காக ஏஜென்டிடம் போகிறார்கள். இதனை தொடர்ந்து 27 லட்ச ரூபாய் திருடிட்டு போன ஜீவாவை கண்டுபிடித்தால் அந்த பணத்தை நம்ம ஆட்டையை போடலாம் என்று ரோகினி நினைக்கிறார். ஆனால் இவர் எடுக்கப் போகும் முயற்சியால் இவருக்கு தான் பிரச்சனை உண்டாகப் போகிறது.
அதாவது ரோகிணி, ஜீவாவை நெருங்க நெருங்க முத்து கையில் சிக்க போகிறார். அப்படி மட்டும் முத்துவிடம் ஜீவா சிக்கிவிட்டால் ரோகிணி கதை அவ்வளவுதான். இதற்கிடையில் முத்துவை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சுருதி புரிந்து கொண்டு வருகிறார்.
மனைவி மீது இவ்வளவு அன்பையும் அக்கறையும் வைத்திருக்கும் முத்து இஸ் கிரேட் என்று சொல்லும் அளவிற்கு சுருதி முத்துவை புரிந்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர்களுடைய ஒற்றுமை அதிகரிக்க போகிறது. கடைசியில் ரோகினி யாருடைய ஆதரவும் இல்லாமல் தனி மரமாக நிற்கப் போகிறார்.