சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

செண்டிமெண்டாக பேசி விஜயா மனசை மாற்ற போராடும் ரோகிணி.. கல்யாணியின் குடும்பத்தை கண்டுபிடிக்க போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி கொடுத்த ஐடியாவின் படி மனோஜ் 30 லட்சம் ரூபாய் பணத்தை மறைத்தது தான் விஜயாவிற்கு கோபம். அந்தக் கோபத்தை காட்டும் விதமாக ரோகிணியை விஜயா ஒதுக்கி வைத்து வருகிறார். ஆனால் இப்படியே இருந்துவிட்டால் இந்த வீட்டில் கிடைக்கும் மரியாதை நிரந்தரமாக கிடைக்காமல் போய்விடும்.

அதனால் இப்போதே முடிவு கட்ட வேண்டும் என்று விஜயாவை சமரசம் செய்ய ரோகிணி பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்டு அத்தையை சமாதானமாக சொல்லுங்கள் என்று கெஞ்சுகிறார். அதற்கு அண்ணாமலை நீ செஞ்சது தவறு தான். அதனால் இந்த விஷயத்தை கொஞ்சம் தள்ளிப்போடு. அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று ரோகினிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பி விடுகிறார்.

பிறகு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரோகிணியும் சாப்பிட வருகிறார். ஆனால் விஜயா சாப்பிடக்கூடாது ஓரமாக போய் நில்லு. நாங்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு சாப்பிட்டால் போதும் என்று சொல்லிவிட்டார். இதை பார்த்த ரவி மற்றும் சுருதி ரோகிணிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்கள். ஆனாலும் ரோகினி, எனக்காக யாரும் அத்தையிடம் பேச வேண்டாம்.

அத்தை மனசு மாறும்வரை நான் இந்த வீட்டில் சாப்பிட மாட்டேன். எனக்காக பேசுவதற்கு இந்த வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து விட்டது. அத்துடன் என்னுடைய அம்மா இருந்திருந்தால் எனக்காக வந்து இங்கே பேசி இருப்பாங்க என்று சென்டிமென்டாக பேசி கிளம்பிவிட்டார். அடுத்து நேரடியாக விஜயாவின் தோழி பார்வதி அத்தை வீட்டுக்கு ரோகினி போய்விடுகிறார்.

அவரிடமும் சென்டிமென்டாக பேசி விஜயாவின் மனசை மாற்ற வேண்டும் என்பதற்காக பல பொய்களையும் கண்ணீர் விட்டும் பார்வதியிடம் கெஞ்சுகிறார். பார்வதியும் ரோகிணியின் உண்மையான குணம் தெரியாமல் பாசமாக பேசி மகளைப்போல அரவணைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். எப்படியாவது விஜயாவின் மனசை சரி செய்து விட்டால் மறுபடியும் அந்த வீட்டில் ராஜ்ஜியம் பண்ணலாம் என்ற காரணத்திற்காக ரோகிணி ஒவ்வொருவரிடமும் கெஞ்சிக் கொண்டு வருகிறார்.

அடுத்ததாக மீனா, ரோகிணி சிட்டியிடம் அடிக்கடி வட்டிக்கு பணம் வாங்கி செலவழிப்பதாக சொல்லிவிடுகிறார். உடனே முத்துவும், இந்த பார்லர் அம்மா எப்படிப்பட்ட ஆள் என்று புரிஞ்சுக்க முடியல. மனோஜ் என்னன்னா பணத்தை ஊதாரித்தனமாக செலவு பண்றான். இந்த பார்லர் அம்மா பணத்தை வட்டிக்கு வாங்கி செலவு பண்ணுது. என்னதான் இவங்களுக்குள் நடக்குது என்று தெரியவில்லை.

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பார்லர் அம்மாவின் குடும்பத்தின் மீது சந்தேகம் இருக்கிறது. இவங்க அப்பாவும் மலேசியாவில் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு தடவை கூட பார்த்து பேசின மாதிரியே இல்லை. இதை எல்லாம் கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும், அத்துடன் சிட்டிக்கும் ரோகினிக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முத்து ஆதாரத்தை தேட கிளம்பி விட்டார்.

இன்னும் கூடிய விரைவில் அதுவும் நடக்கும் என்பதற்கு ஏற்ப ரோகினி சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறார். அடுத்ததாக மீனா பூவை டெக்கரேஷன் பண்ணி கல்யாண மண்டபங்களில் ஆர்டரை எடுப்பதற்காக மண்டபத்தின் வாசலில் வைத்திருக்கிறார். இதை பார்த்து சிந்தாமணி கிண்டல் அடிக்கும் பொழுது கோபமாக மீனா பேசியதால் சிந்தாமணியின் அடி ஆட்கள் மீனா கொண்டு வந்த டெக்கரேஷன் பூக்கள் அனைத்தையும் குப்பை தொட்டியில் போட்டு விடுகிறார்கள்.

உடனே கோவப்பட்ட மீனா, இன்னைக்கு என்னுடைய பூ அனைத்தையும் நீங்க குப்பைத் தொட்டில போட்டீங்க. இத குறிச்சு வச்சுக்கோங்க இதே மாதிரி இன்னொரு நாள் நான் செய்த எல்லா பூக்களும் கோபுரத்துக்கு வந்து நிற்கும். என்னுடைய வேலை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கூடிய விரைவில் நான் வளர்ந்து காட்டுவேன் என்று சவால் விட்டுவிட்டார்.

Trending News