Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா சொன்னபடி 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு முத்து வாடகைக்கு காரை விடுவதற்கு செகண்ட்ஸ் காரை போய் பார்க்கிறார். போன இடத்தில் இரண்டு கார் பிடித்திருப்பதால் கொஞ்சம் குழம்பிய நிலையில் எந்த கார் நல்லா இருக்கிறது என்று மீனாவே தேர்வு செய்யட்டும் என்று மீனாவிற்கு ஃபோன் பண்ணி வர சொல்கிறார்.
அங்கே வந்த மீனா, இப்போதைக்கு கார் வாங்க வேண்டாம் என்று முத்துவை தடுக்கிறார். இதை கேட்டதும் முத்து நீதான வாங்க சொன்ன இப்போ என்ன இப்படி சொல்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மீனா, தற்போது குடும்பம் இருக்கும் சூழலில் புதுசாக கார் வாங்கிட்டு போனால் யாருமே சந்தோஷப்பட மாட்டார்கள். அத்துடன் மாமாவும் அத்தையும் பேசாமல் இருக்கும் பொழுது நாம் நம்ம வேலையை பார்த்துகிட்டு இருக்க முடியாது.
கர்ப்பமானதை உணர்வுபூர்வமாக உளறிய ரோகினி
அதனால் முதலில் குடும்ப பிரச்சனை எல்லாம் சரியாகட்டும் அதன் பிறகு வந்து கார் வாங்கலாம் என்று முத்துவிடம் சொல்லி விடுகிறார். உடனே முத்து, மீனா பேச்சை கேட்டுக் கொண்டு சரி என்று சொல்லிய நிலையில் அப்பா அம்மாவை பேச வைப்பதற்கு பாட்டி வந்தால் தான் சரியாக இருக்கும் என்று ஊரில் இருந்து போன் பண்ணி பாட்டியை வரவழைக்கிறார்.
இதற்கிடையில் சுருதி டப்பிங் வாய்ஸ் கொடுத்துக்கிட்டு இருக்கும் பொழுது ஒரு பெண் டெலிவரி நேரத்தில் எந்த அளவிற்கு கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதை காட்டும் விதமாக குரல் கொடுக்கிறார். இந்த காட்சியை பார்த்து குரல் கொடுத்த பிறகு சுருதிக்கு அவருடைய அம்மா ஞாபகம் வந்து போன் பேசிக்கொள்கிறார். அப்படியே வீட்டிற்கு ஸ்ருதி ஒரு பதட்டத்துடன் வருகிறார்.
வீட்டில் மீனா மற்றும் ரோகினியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுருதியை கூப்பிட்டு என்னாச்சு ஏன் டல்லாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ருதி, ஒரு குழந்தை பிறக்கும் விஷயத்தில் இவ்வளவு கஷ்டங்கள் பட வேண்டும் என்பதை இன்னைக்கு தான் நான் நேரில் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறேன். அதனால் இனி ரவியை என் பக்கத்தில் கூட விடக்கூடாது.
இதே மாதிரியெல்லாம் என்னால் அனுபவிக்க முடியாது என்று சொல்லுகிறார். அப்பொழுது ரோகினி, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது என்னெல்லாம் நடக்கும் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கடந்து வருகிறார் என்பதை அனுபவத்துடன் சொல்லும் விதமாக ஒவ்வொரு மாதமும் என்ன நடக்கும் எப்படி இருக்கும் என்பதை புட்டு புட்டு வைக்கிறார்.
இப்படி ரோகினி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும் போது மீனா மற்றும் சுருதிக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் ரோகிணி, க்ரிஷ் இன் அம்மாவாக மாறி கல்யாணியாக ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி வருகிறார். பிறகு கடைசியில் தான் ரோகிணிக்கு தெரிகிறது நாம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எல்லாத்தையும் உளறி விட்டோம் என்பது.
உடனே இதெல்லாம் நான் கேள்விப்பட்டு பார்த்திருக்கிறேன் என்று அப்படியே சமாளிக்க போகிறார். ஆனாலும் மீனாவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நடந்த அனைத்து விஷயத்தை முத்து வந்த பிறகு அவரிடம் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இப்படி என்னதான் ரோகினி பற்றி இவர்களுக்கு சந்தேகம் வந்தாலும் அதை கண்டுபிடிக்கவும் மாட்டார்கள். அதனால் ரோகிணியும் இப்போதைக்கு மாட்டவும் வாய்ப்பில்லை.
அடுத்ததாக பாட்டியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்த முத்து, எப்படியாவது அம்மா அப்பாவிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தி இருவரையும் பழைய மாதிரி பேச வைக்க வேண்டும் என்று கேட்கிறார். அதன்படி வீட்டிற்குள் நுழைந்த பாட்டியை பார்த்ததும் விஜயா அதிர்ச்சியாகி வாயடைத்துப் போய்விட்டார். இனி விஜயாவின் கொட்டம் எல்லாம் அடங்கும் என்று சொல்வதற்கு ஏற்ப பாட்டியின் ராஜ்ஜியம் நடக்கும்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ரோகிணி கொடுத்த பணத்தில் பிசினஸ் பண்ணும் முத்து
- திருந்தாத விஜயா, அசிங்கப்பட்ட மீனா
- முத்து விரித்த வலையில் சிக்கிய விஜயா