சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

தொடர் ஏமாற்றத்தை கொடுக்கும் சிறகடிக்கும் ஆசை சீரியல்.. மொத்தத்தையும் டேமேஜ் பண்ணிய ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினியின் கேரக்டர் முழுக்க முழுக்க பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி வாழ வந்த குடும்பத்தில் இருப்பவர்களை ஏமாற்றி புருஷனை தன் வசப்படுத்தி காரியத்தை சாதிக்கும் அளவிற்கு இருக்கிறது. அதிலும் அவருடைய சந்தோஷத்திற்காக யாரை வேண்டுமானாலும் கஷ்டப்படுத்த தயார் என்பதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனாவிற்கு தொடர்ந்து குடச்சல் கொடுத்து வருகிறார்.

இன்னொரு பக்கம் தான் செய்த தவறு வெளியே வந்தாலும் மனோஜ் தன்னை விட்டு போகாதபடி தன் பக்கமே நிற்க வேண்டும் என்பதற்காக மனோஜ்க்கு அவ்வப்போது வேப்பிலை அடித்து வருகிறார். ரோகிணி பற்றி எதுவும் தெரியாத மனோஜும் ரோகினி தன்மீது பாசத்தையும் அன்பையும் காட்டி வருகிறார் என்று நெகிழ்ந்து போய்விட்டார். அந்த வகையில் தற்போது மனோஜ் வைத்திருக்கும் ஷோரூமுக்கு டேட்டு போடுறவர் வருகிறார்.

அவரிடம் மனோஜ் எனக்கு இதெல்லாம் பிடிக்காது பயமாக இருக்கும் வேண்டாம் என்று சொல்கிறார். இதை பார்த்த ரோகினி எனக்கு ரொம்ப நாள் ஆசை நான் டேட்டு போட போகிறேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். மனோஜ் வேண்டாம் வலிக்கும் அப்புறம் காய்ச்சல் வந்துவிடும் என்று தடுக்கிறார். ஆனாலும் கேட்காத ரோகினி டேட்டு போடுகிறார். மனோஜ் பயத்தின் காரணமாக நான் இதை பார்க்க விரும்பவில்லை என்று ஓரமாக ஒதுங்கி விடுகிறார்.

பிறகு ரோகிணி கையில் டேட்டு போட்டு முடித்து விட்டது மனோஜிடம் காட்டுகிறார். அதை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்டு ரோகினியை கொண்டாட ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் ரோகினி, மனோஜ் பெயரை டேட்டு போட்டு இருக்கிறார். என் மீது உனக்கு அவ்வளவு பாசம் இருக்கிறதா என்பதை நான் இப்பொழுது நன்றாகவே உணர்ந்து விட்டேன் என்று ரோகினி மீது பாசத்தை கொட்டி ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.

பிறகு இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். வழக்கம்போல் முத்து, ரோகிணி பண்ணுவதை அலட்சியப்படுத்தும் விதமாக கிண்டல் அடிக்கிறார். அடுத்ததாக அண்ணாமலை வேலைக்கு கிளம்பி விடுகிறார். உடனே ரோகிணி, மாமா நீங்க வாரத்தில் ஒரு நாள் மட்டும் தானே போவீங்க. இன்னைக்கு ஏன் போறீங்க என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ஸ்கூலில் இன்னைக்கு பெற்றோர்களின் சந்திப்பு இருக்கிறது. அதனால் சின்ன சின்ன வேலைகள் இருக்கிறது போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

இதை எல்லாம் கேட்ட முத்து, மீனாவிடம் நீயும் வா அங்கே தான் கிரிஷும் படிக்கிறான். அவனை பார்த்து பேசிட்டு வருவோம் என்று சொல்லி இரண்டு பேரும் கிளம்பி விடுகிறார்கள். இதை பார்த்த ரோகினி என்ன பண்ணுவது என்று தெரியாமல் திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் கிருஷிடம் பெற்றோர்கள் சந்திப்புக்கு வருகிறேன் என்று ரோகிணி சொல்லி இருந்தார். அதனால் இப்பொழுது எப்படி போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கடைசிவரை இந்த ரோகினி செய்த தவறுகள் வெளிவராமல் தொடர்ந்து சொதப்பல் ஆகவே கதை நகர்ந்து கொண்டு வருகிறது. ஏகப்பட்ட பொய்களை சொல்லி பல இடங்களில் பலரையும் ஏமாற்றி இருக்கிறார். அப்படிப்பட்ட ரோகிணியின் உண்மையான ரகசியம் எதுவும் வெளியே வராமல் மொத்த நாடகத்தையும் டேமேஜ் பண்ணி வருகிறது. இப்பொழுது புதுசாக உள்ளே நுழைந்த பவானி கதையில் கசாப்பு கடை மணி மூலம் முத்து அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News