சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

மீனா முத்துவை முட்டாள் ஆக்கிய ரோகிணி.. அண்ணாமலை முன் கிரிஷுக்கு அம்மாவாக வந்த கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஏமாறவங்க இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஒவ்வொரு விதத்திலும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பாங்க என்று ஒரு சொலவடை உண்டு. அது போல் தான் ரோகிணி மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு பெற்றோர்கள் சந்தித்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

இதில் பெற்றோர்கள் நேரடியாக வர முடியவில்லை என்றாலும் வீடியோ கால் மூலம் வந்து டீச்சரிடம் பேச வேண்டும் என்று ஒரு ரூல்ஸ் இருக்கிறது. ஆனால் அண்ணாமலையும் ஸ்கூலில் வேலை இருக்கிறது என்று போயிருக்கிறார். அதே நேரத்தில் முத்து, மீனாவை கூட்டிட்டு கிரீசை பார்த்து பேசுவதற்காக ஸ்கூலுக்கு போய் இருக்கிறார் என்ற விஷயம் ரோகிணிக்கு தெரிந்து விட்டது.

அதனால் ரோகிணி மாஸ்டர் பிளான் பண்ணி மறுபடியும் எல்லாரையும் முட்டாளாக்குவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் ஸ்கூலுக்கு போகாமலேயே வீடியோ கால் மூலம் டீச்சரிடம் பேசலாம் என்று வித்யா வீட்டிற்கு ரோகினி வந்துவிட்டார். ஆனால் அதே நேரத்தில் முகத்தை காட்டி பேசினால் அங்கே அண்ணாமலை பார்த்து விடுவாரோ என்ற பயம் ரோகிணிக்கு வந்துவிட்டது.

அதனால் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தலையில் டோப்பா முடியை போட்டு கண்ணாடி போட்டு, மாஸ்க் போட்டு ரெடியாகிவிட்டார். ஆனாலும் பேசினால் அதன்மூலமும் அண்ணாமலை கண்டுபிடித்து விடுவார் என்பதற்காக பின்னாடி இருந்து வித்யாவை பேச வைக்கிறார். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் முடிந்த நிலையில் எதிர்பார்த்த படி கிரிஷியை கூட்டிட்டு ரோகினி அம்மா ஸ்கூலுக்கு வந்து விடுகிறார்.

அங்கே முத்து மற்றும் மீனா, கிரிசை பார்த்து பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது மீனா முத்து பேச வந்த நிலையில் ரோகிணி அம்மா சரியாக பேசாமல் பள்ளிக்கூடத்துக்குள் போய்விடுகிறார். அங்கே அண்ணாமலை இருந்ததால் பார்த்து பேசிவிட்டு பெற்றோர்கள் சந்திக்கும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறார். அப்பொழுது கிரிஷின் டீச்சர், ரோகிணிக்கு வீடியோ கால் பண்ணுகிறார்.

ரோகிணி ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளும் பண்ணிய நிலையில் கண்டுபிடிக்காத அளவிற்கு வீடியோகாலில் வந்து பேச ஆரம்பித்து விடுகிறார். பின்னாடியே அண்ணாமலை இருக்கிறார் என்று உணர்ந்த ரோகிணி உஷாராகி அந்த பெற்றோர்கள் சந்திப்பு வீடியோ காலில் யாருக்கும் தெரியாமல் பேசி முடித்து விடுகிறார். அண்ணாமலை பார்த்து இது ரோகிணி தான் என்று கண்டுபிடிக்காத அளவிற்கு பக்காவாக பிளான் பண்ணி கிரிஷின் அம்மாவாக கல்யாணி வந்துவிட்டார்.

இது எதுவும் தெரியாத முத்து மற்றும் மீனா ஸ்கூலுக்கு வெளியே நின்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் ஒழுங்காக பேசின கிரிஷின் பாட்டி இப்ப ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்பதை பார்க்கும்பொழுது ஏதோ ஒரு காரணம் இருப்பது போல் தெரிகிறது. அந்த வகையில் ஒரு வேலை கிரிஷின் அப்பா மனோஜாவாகவும் அம்மா ஜீவாவாகவும் இருக்கலாம் என்பது போல் மீனா, முத்துவிடம் சொல்கிறார்.

இந்த மாதிரி முட்டாள்கள் இருக்கும் வரை ரோகிணி ஈஸியா ஒவ்வொரு விஷயத்திலும் எஸ்கேப் ஆகிக்கொண்டே போகலாம். ஆனால் இதுவரை இப்படி ஒரு சந்தேகம் இல்லாத பட்சத்தில் தற்போது அட்லீஸ்ட் மனோஜ் மீதாவது ஒரு சின்ன சந்தேகம் வந்திருக்கிறது. இனி இதை கண்டுபிடிக்கும் விதமாக ஒவ்வொரு விஷயத்திலும் இறங்கும் பொழுது நிச்சயம் ரோகினி மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Trending News