Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், வீட்டுக்கு வந்த ரோகினி உண்மையை பேச முடியாமல் மறுபடியும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் முட்டாள் ஆக்கி அனைவரது காதிலும் பூ சுத்தி விட்டார். இந்த மாதிரி ஏமாறவங்க இருந்தால் ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். இதற்கு சிறந்த உதாரணம் ரோகிணி தான்.
அதாவது பணக்கார வீட்டு பொண்ணு, மலேசியா அப்பா என்று சொன்னதெல்லாம் பொய் என்றால் உன்னுடைய குடும்பம் எப்படிப்பட்டது எங்கே இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கேட்கிறார். அதற்கு ரோகிணி என்ன சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் ஒரு பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார். அதாவது என்னுடைய அப்பா மலேசியாவில் இருந்தார், ஆனால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்ததால் எங்களை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் பண்ணி அங்கே செட்டில் ஆகிவிட்டார்.
இதனால் நானும் குடும்பத்தை வெறுத்துப் போய் சென்னையிலேயே தனியாக இருந்தேன். அப்பொழுதுதான் பார்வதி அத்தை வீட்டுக்கு மசாஜ் பண்ணும் போது விஜயா ஆன்ட்டியை பார்த்தேன். ஆனால் அவங்களுடைய வீக்னெஸ் பெரிய பணக்கார பெண்ணாக இருந்தால் தான் மதிப்பாங்க என்பதினால் நான் ஆரம்பத்தில் சும்மா ஒரு பொய் சொன்னேன். ஆனால் அதன் பிறகு மனோஜை பார்த்ததும் எனக்கு மனோஜ் ரொம்ப பிடித்து போய்விட்டது.
அதனால் உண்மையை சொன்னால் மனோஜை எனக்கு கட்டி வைக்க மாட்டார்கள் என்ற பயத்தினால் நானும் அந்த பொய்யே அப்படியே சொல்ல வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது என்று சொல்கிறார். உடனே அதன் பிறகு ஆவது உண்மையை சொல்லி இருக்கலாமே என்று பாட்டி கேட்ட பொழுது மீனாவின் நிலைமையை பார்த்ததும் நான் உண்மையை சொல்லிவிட்டால் என்னையும் அப்படித்தான் படுத்துவாங்க என்பதற்காக நான் மறைத்து விட்டேன் என்று சொல்கிறார்.
உடனே பாட்டி, விஜயாவை குறை சொல்லிவிட்டு திட்ட ஆரம்பித்து விடுகிறார். அடுத்ததாக எப்படி உங்க அப்பா கொடுத்தாங்கன்னு பணத்தை திருப்பிக் கொடுத்தாய் என்று கேட்கிறார்கள். அதற்கு ரோகிணி, எனக்காக பார்லர் வைப்பதற்கு விஜயா அத்தை பணம் கொடுத்தாங்க. ஆனால் அந்த பணத்தால் ஒரு பிரச்சினை வந்தது என்றதும் நான் பார்லரை வித்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிவிட்டது.
ஆனால் அண்ணாமலை மற்றும் முத்துவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அண்ணாமலை இந்த விஷயம் எங்களுக்கு முன்னாடியே தெரியும். முத்து வந்து சொல்லிவிட்டான், ஆனால் என்ன காரணம் என்று நீயே சொல்லட்டும் என நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என சொல்கிறார். ஆக மொத்தத்தில் இப்பொழுது பிடிப்பட்டாலும் உண்மையை சொல்லாமல் பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறார்.
அத்துடன் அண்ணாமலை வேறு ஏதாவது பொய் இருக்கிறதா, இல்லை என்றால் எல்லா உண்மையும் சொல்லி விட்டாயா என்று சத்தியம் பண்ண சொல்கிறார். ரோகினி இப்பொழுது க்ரிஷ் விஷயத்தை பற்றி பேச முடியாது என்பதற்காக மறுபடியும் பொய் சத்தியம் சொல்லி எல்லோரையும் நம்ப வைத்து விடுகிறார். இந்த மக்கும் மனோஜும் ரோகிணி மீது கோபப்படாமல் ரோகிணியே காப்பாற்றுவதற்கு பொய் சொல்லி விடுகிறார்.
ஆனாலும் இதன்பிறகு ரோகிணியை தலையை தூக்கி வைத்து ஆடும் விஜயா மீனாவைப் போல ஒரு வேலைக்காரி மாதிரி தான் நடத்தப் போகிறார். ஆனாலும் ரோகினி மீது இறக்கப்பட்டு தியாகியாக இருக்கும் மீனா குறுக்கே வந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு ரோகினியை காப்பாற்றி விடுவார்.