புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சீதா வேலைக்கு ஆப்பு வைத்த ரோகினி, கெஞ்சிய மீனாவின் தங்கை.. விஜயா மனோஜ்க்கு சுருதி கொடுத்த சாக் ட்ரீட்மென்ட்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு மீனா வழக்கம் போல் பூ கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுது அக்காவை பார்த்த சீதா கேன்டீனுக்கு கூட்டிட்டு போயி டீ சாப்பிட்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சீதா, ரோகிணி பற்றி வீட்டில் சொன்னியா என்று கேட்கிறார். அதற்கு மீனா இந்த விஷயத்தால வீட்டில் தேவையில்லாம பிரச்சனை. வழக்கம் போல் ஏன் தலை தான் உருள ஆரம்பித்து விட்டது.

நான் அதுக்கு தான் அன்னைக்கே எதையும் பற்றி விசாரிக்க வேண்டாம். ரோகிணி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நீ அரைகுறையாக விசாரித்து என்னிடம் சொல்ல அது வீட்டில் அனைவருக்கும் தெரிந்து மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்து அனைவரும் என்னை திட்டாத குறையாக திட்டி அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று தங்கையிடம் புலம்பி விட்டார்.

விஜயா கொட்டத்தை அடக்க சரியான ஆளு ஸ்ருதி தான்

அத்துடன் இனி ரோகிணி விஷயத்தை நீனும் கண்டுக்க வேண்டாம் என்று சொல்லி மீனா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதனை அடுத்து சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் டாக்டர் சீதாவை கூப்பிட்டு இங்கே வருபவர்கள் உடைய விவரங்களை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்பது உனக்கு தெரியாதா? நீ செய்த காரியத்தால் அவர்கள் இந்த ஹாஸ்பிடல் விட்டு வேற இடத்துக்கு செக்கப்புக்கு போய் விட்டாங்க.

அதனால உனக்கு இந்த வேலை கிடையாது என்று சீதாவிற்கு ரோகிணி டாக்டர் மூலம் ஆப்பு வைத்து விட்டார். ஆனால் சீதா, விடாப்பிடியாக அந்த டாக்டரிடம் கெஞ்சி அவருடைய வறுமையையும் குடும்பம் கஷ்டத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டு இதே மாதிரி இனி எந்த தவறும் நடக்காது என்று கெஞ்சி மறுபடியும் அந்த வேலையை வாங்கிக் கொண்டார்.

இதனை அடுத்து மீனா சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது பூ கட்டுவதற்காக தோழிகள் வந்து கூப்பிடுகிறார்கள். ஆனால் மீனா, முத்து வரும்பொழுது நான் வீட்டில் இருக்க வேண்டும். அதனால் நான் வர முடியாது என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் முத்து போன் பண்ணி நான் நாளைக்கு காலைல தான் வருவேன். எனக்கு ஒரு சவாரி இருக்கிறது. ரொம்ப தூரமாக போய்க் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

அதே மாதிரி ஸ்ருதியும் வேலை முடித்து இரவு வரும் பொழுது ரவிக்கு கால் பண்ணுகிறார். ரவி எனக்கு வேலை இருக்கிறது நான் முடித்துவிட்டு வர நேராகும் என்று சொல்லி நீ சீக்கிரமா சாப்பிட்டு தூங்கு என்று சொல்கிறார். உடனே சுருதி நம்ம ரெண்டு பேருடைய கணவர்கள் லேட்டா வருவதால் நாம் இருவரும் சேர்ந்து இன்று படம் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

அதன்படி மீனா மற்றும் சுருதி படம் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது பேய் படத்தை காட்டுகிறார். இதை பார்த்து பயத்தில் மீனா கத்தி கூச்சலிடுகிறார். உடனே விஜயா, மீனாவே ஒரு பெரிய பேய், அவளுக்கு பேயென்றால் பயமா என்று நக்கல் அடிக்கிறார். அத்துடன் சுருதி உங்களுக்கு பேய் என்றால் பயம் இல்லையா என்று கேட்கும் பொழுது, பேய் எல்லாம் என்ன பார்த்து தான் பயப்படனும். அத பாத்து நான் பயப்பட மாட்டேன் என்று சொல்லித் தூங்க போகிறார்.

அப்பொழுது சுருதி, இந்த அத்தைக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மீனாவிடம் சொல்லி விஜயா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பயமுறுத்தும் விதமாக ரெக்கார்டிங் மூலம் நாய் ஊல விடுற சத்தம், அலற சத்தம், அழுகிற சத்தம், மற்றும் விஜயாவை பார்த்து பேசுற மாதிரி செட்டப் செய்து பயம் காட்டுகிறார். இதைக் கேட்டதும் விஜயாவும் பயப்பட ஆரம்பித்து விடுகிறார்.

அதே மாதிரி மனோஜும் பயத்தில் புலம்புகிறார். ஆக மொத்தத்தில் சுருதி, விடிய விடிய விஜயா மற்றும் மனோஜை வச்சு செய்யும் அளவிற்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்து விடுகிறார். இதனால் பயத்தில் காலையில் வரை கதி கலங்கி போய் நிற்கிறார்கள். இப்படிப்பட்ட மாமியாருக்கு ஸ்ருதி போல ஒரு மருமகள் தான் சரியான பாடத்தை கற்பித்துக் கொடுக்க முடியும் என்பதற்கு ஏற்ப தரமான சம்பவத்தை அவ்வபோது செய்து விஜயாவை ஆட்டிப் படைக்கிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News