ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரோகினி கண்ட கனவு, விஜயாவுக்கு தெரியவரும் உண்மை.. மீனாவை கரெக்ட் பண்ண முத்து கொடுக்கும் ஐடியா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து ரோகினியின் அம்மாவுக்கு போன் பண்ணி கிரிசை பற்றி விசாரித்து எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். ஆனால் அதற்கு ரோகிணி அம்மா திருப்பி முத்து கால் பண்ணவே கூடாது என்பதற்கு ஏற்ப கோவமாக பேசி, நாங்கள் தெரிஞ்சவங்க வீட்டில் இருக்கிறோம். இனி எங்களுக்கு போன் பண்ணி தொந்தரவு பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதனால் வீட்டிற்கு வந்ததும் முத்து, மீனாவிடம் ரோகிணி அம்மா பேசிய விஷயத்தை சொல்லுகிறார். கிரீஸ் பற்றிய ரகசியம் ஏதோ இருக்கிறது. அந்த விஷயத்தை நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக கிரிஷின் பாட்டி இப்படி நடந்து கொள்வது போல் தெரிகிறது என்று முத்து, மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதை மறைந்திருந்து ரோகினி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவு அவமானப்படுத்தி பேசினாலும் இந்த முத்து திருந்தவே மாட்டான் போல இருக்கு. மறுபடி மறுபடியும் கிருஷ் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறதே வேலையா வைத்துக் கொண்டிருக்கிறார் என்று புலம்புகிறார். அத்துடன் கிருஷ் பற்றிய விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்து, மீனாவிடம் சொல்கிறார். அடுத்து ரோகிணி இதே பயத்துடன் தூங்கப் போனதனால் ரோகிணி பற்றிய விஷயங்கள் அனைத்தையும் விஜயா மற்றும் மனோஜ் தெரிந்து கொண்டது போல் கனவு காண்கிறார்.

அதில் ரோகினி என்னை மன்னித்து விடுங்கள் அத்தை, நான் தெரியாமல் ஏதோ தவறு பண்ணி விட்டேன் என்று சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் மனோஜ் மற்றும் விஜயா, ரோகினையை மன்னிக்காமல் மொத்த குடும்பத்தையும் ஏமாத்திட்டு எப்படி இங்கே நீ வாழ்ந்தாய். இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று ரோகிணி கழுத்தைப் பிடித்து விஜயா தள்ளி விடுகிறார்.

உடனே பதறிப் போய் முழித்த ரோகினி இதெல்லாம் கண்டது கனவா என்ற பயத்தில் பக்கத்தில் இருக்கும் மனோஜிடம் கட்டிப்பிடித்து என்னை எந்த காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக்கூடாது. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று மனோஜிடம் சொல்ல, மனோஜும் இதெல்லாம் சொல்லி தான் தெரிய வேண்டுமா? உன்னை எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி ரோகினியை தூங்க வைக்கிறார்.

ஆனால் ரோகிணி கண்ட கனவு இப்படி விஜயா மற்றும் மனோஜ்க்கு தெரிந்து விட்டால் ரோகிணி நிலைமை கேள்வி குறி தான் என்பதற்கு ஏற்ப வீட்டை விட்டு முதலில் கழுத்தை பிடித்து இருவரும் சேர்ந்து துரத்த போகிறார்கள். அத்துடன் இதுவரை இல்லாமல் இப்பொழுது ரோகிணிக்கு வந்த கனவு, அப்படியே நிஜமாக போவது போல் சீக்கிரம் ரோகிணி பற்றிய ரகசியங்கள் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.

அடுத்ததாக மீனா பூ கொண்டு போகும் பொழுது மீனாவை தொடர்ந்து ஒருவர் ஃபாலோ பண்ணி போகிறார். அதனால் பயந்து போன மீனா, அந்த தெருவில் இருக்கும் வித்யா வீட்டிற்குள் நுழைகிறார். அங்கே வித்யா மற்றும் ரோகினி பேசிக் கொண்டிருக்கிறார்கள். மீனா வந்ததும் முத்துவின் போனை கையில் வைத்திருக்கும் வித்தியா அந்த போனை மீனாவிடமிருந்து மறைத்து விடுகிறார்.

பிறகு மீனா போனதும் ரோகிணி, வித்யாவிடம் அந்த போனை கடலில் போட்டு விடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால் வித்யா அந்த போனை கடலில் போடாமல் மிஸ் பண்ணி சொதப்பி விடப் போகிறார். மறுபடியும் அந்த போன் முத்து கையில் கிடைக்கப் போகிறது, வித்தியாவும் மாட்டிக் கொள்ளப் போகிறார். அடுத்ததாக முத்து கார் செட்டில் இருக்கும் பொழுது முத்துவின் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வருவதால் எல்லோரும் சேர்ந்து அவருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

அதே மாதிரி அங்கு வந்த முத்துவின் நண்பர், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை எப்படி கரெக்ட் பண்ண என்று தெரியாமல் முத்துவிடம் ஐடியா கேட்கிறார். அந்த நபர் மீனாவை தான் காதலிக்கிறார் கரெக்ட் பண்ண ஐடியா கேட்கிறார் என்று தெரியாத முத்து எப்படி கரெக்ட் பண்ணனும் என்று ஐடியா கொடுத்து அனுப்புகிறார்.

அடுத்ததாக மனோஜின் கடைக்கு ஏதோ சூனியம் வைத்தது போல் முட்டை வந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் ரோகிணி மற்றும் மனோஜ் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். இப்படிப்பட்ட வேலையெல்லாம் PA தான் பண்ணுவார். அந்த வகையில் மறுபடியும் ரோகிணிக்கு டார்ச்சர் கொடுக்க வந்துவிட்டார் போல.

Trending News