வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

முடிவுக்கு வரும் ரோகினியின் ஆட்டம்.. விஜயா மூஞ்சில் கரியை பூச போகும் முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி இத்தனை நாளாக பார்லருக்கு சொந்தக்காரி என்றும் விஜயா பெயரில் தான் இருக்கிறது என்று அனைவரையும் நம்ப வைத்து இருந்தார். ஆனால் தற்போது ரோகிணி வேலை பார்க்கும் பார்லரின் உரிமையாளர் முத்துவின் காரில் ஏறி பார்லருக்கு போயிருந்தார்.

அப்பொழுது போகும் பொழுது முத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் அவசரத்தில் கடைக்குள் போய்விட்டார். இதனால் முத்து பணத்தை வாங்குவதற்காக பார்லருக்கு போகிறார். போனதும் முத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அந்த உரிமையாளர் கொடுக்க சொல்கிறார். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் இது விஜயா பியூட்டி பார்லர் தானே வேற பெயர் போட்டிருக்கிறது என்று கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் ஆரம்பத்தில் அவங்களோட பார்லர் ஆக இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த பார்லரை ரோகிணி இவர்களுக்கு விற்று விட்டார் என்று சொல்கிறார். அத்துடன் ரோகிணி தற்போது என்னை மாதிரி இங்கே வேலை பார்க்கும் ஒரு பணியாளர் அவ்வளவுதான் என்ற உண்மையும் முத்துவிடம் சொல்லிவிடுகிறார். உடனே முத்து அங்கிருந்து போட்டோக்கள் எல்லாத்தையும் எடுத்து விட்டு வீட்டுக்கு திரும்புகிறார்.

Also read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. கதிரின் மாற்றத்தால் முன்னுக்கு வந்த எதிர்நீச்சல்

வீட்டிற்கு போனதும் முத்து, இந்த விஷயங்கள் அனைத்தையும் அப்பாவிடம் சொல்கிறார். உடனே அப்பா இப்ப யாருக்கும் இது தெரிய வேண்டாம் சொல்லாதே என்று மறைத்து விடுகிறார். இது தெரியாத ரோகிணி வீட்டிற்கு வந்து ஓவராக எஜமான் மாதிரி ஆக்டிங் கொடுக்கிறார். இதை பார்த்து கடுப்பான முத்து அவ்வப்போது ரோகிணியை சீண்டி வருகிறார்.

அடுத்ததாக மனோஜ் எந்த வேலைக்கும் போகாமலேயே ஊதாரிதனமாக செலவு செய்து வருவதை முத்து தட்டி கேட்கிறார். ஆனால் வழக்கம் போல் விஜயா, மனோஜ்க்கும் ரோகிணிக்கும் ஓவராக சப்போர்ட் பண்ணி முத்துவை திட்டி அனுப்பி விடுகிறார். இதனை அடுத்து ரோகிணி பற்றிய உண்மையான விஷயம் முத்து கூடிய சீக்கிரத்தில் குடும்பத்தின் முன் போட்டு உடைக்க போகிறார். இது தெரிந்த பிறகு விஜயா கொட்டம் கொஞ்சம் அடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: பேராசையால் கனவு கோட்டை கட்டி வரும் விஜயா.. ரோகிணி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட முத்து

Trending News