ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 16, 2025

ரோகினியின் ஆட்டத்திற்கு முடிவு கட்டியாச்சு, முத்துக்கு தெரிய போகும் ரகசியம்.. மீனா மிரட்டியதால் வெளிவந்த உண்மை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா புதுசாக பிசினஸ் ஆரம்பித்ததால் அதற்கான விதிமுறைகள் அனைத்தையும் ரவியை பார்த்து ஃபாலோ பண்ண சொல்லிட்டார். அதிலும் படிக்காமலேயே இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்த ரோகினி, மனோஜிடம் படித்தால் மட்டும் போதாது புத்திசாலித்தனமும் வேண்டும்.

உங்க அண்ணன் படிக்காமலேயே எல்லா விஷயத்தையும் தெளிவாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனா நீ படித்திருந்தும் ஒரு கடைக்கு கட்ட வேண்டிய வரியை கூட உன்னால் கட்ட முடியாமல் போய்விட்டது என்று திட்டி விடுகிறார். உடனே மனோஜ், நான் படிச்ச படிப்பு என்ன, அவன் படிக்காதவன் அவனுடன் சேர்த்து வைத்து என்னை ஒப்பிடாதே என்று சொல்லிவிடுகிறார்.

அதற்கு ரோகிணி இந்த ரோஷத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை என்று சொல்லுகிறார். பிறகு முத்துவை சீண்டிய டிராபிக் போலீஸ் வேலையில் இருக்கும் பொழுது அந்த வழியாக சீதா ஹெல்மெட் போடாமல் வருகிறார். அப்பொழுது டிராபிக் போலீஸ், சீதாவை வழிமறைத்து ஹெல்மெட் போடாததால் அபராதம் கட்ட சொல்லுகிறார். உடனே சீதா தெரிஞ்ச ஆளு என்கிற உரிமையில் விளையாடாதீங்க என்று எஸ்கேப்பாக பார்த்தார்.

அப்பொழுது டிராபிக் போலீஸ் நான் இப்பொழுது பணியில் இருக்கிறேன் நான் ஏன் உங்களிடம் விளையாட வேண்டும். நீங்கள் ரூல்சை மீறியதற்கு அபராதம் கட்ட வேண்டும், காசு இல்லை என்றால் சொல்லுங்கள் நான் கட்டி விடுகிறேன் என்ற பணத்தை கொடுக்கிறார். உடனே கோபப்பட்ட சீதா உங்க பணம் தேவையில்லை என்னிடம் இருக்கிறது என்று அபராதத்தை கட்டி விட்டு கோபமாக கிளம்பி விடுகிறார்.

இதனை பார்த்து டிராபிக் போலீஸ் என்ன செய்வது என்று தெரியாமல் தொடர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்ததாக அண்ணாமலை வீட்டிற்கு அண்ணாமலையின் தோழர் பரசுராமன் வருகிறார். வந்ததும் என்னுடைய மகள் காதலித்ததால் நான் பார்த்து வைத்த மாப்பிள்ளை வேண்டாம் என்று ஓடிப் போய்விட்டாள் என்று சொல்லி பீல் பண்ணி அழுகிறார்.

இதை பார்த்ததும் முத்து நான் கண்டுபிடித்து கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லி மீனாவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். மீனா அதைப் பற்றி விசாரிக்கும் பொழுது ஒரு கடையில் வேலை பார்ப்பவர்களிடம் உண்மையை கேட்கிறார். அவர்கள் சொல்ல மறுத்த நிலையில் முத்து ஒரு போலீசாகவும் மப்ட்டியில் வந்து விசாரிக்கிறார் என்று பொய் சொல்லி உண்மைகள் அனைத்தையும் மிரட்டி வாங்கி விடுகிறார்.

அதன் படி பரசுராமனின் மகள் பவானி இருக்கும் இடத்தை முத்து மற்றும் மீனா தெரிந்து கொள்கிறார்கள். அத்துடன் அந்தப் பவானி காதலிக்கப் பையன் ரோகிணி மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை மணியின் சொந்தக்காரர். அந்த வகையில் இந்த டிராக் புதுசாக உள்ளே வந்திருப்பதால் இந்த கதையின் மூலம் ரோகிணியின் மாமாவாக மணி சும்மா நடிக்க தான் வந்திருக்கிறார். ரோகிணியின் அப்பாவும் மலேசியாவில் இல்லை என்ற விவரம் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. அதனால் கூடிய விரைவில் ரோகினியின் ஆட்டத்திற்கு முத்து முடிவு கட்ட போகிறார்.

Trending News