Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி மற்றும் மனோஜ் செய்த தவறுக்கு விஜயாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும் விஜயாவும் எல்லாத்தையும் மறந்துட்டு சமாதானம் ஆகிவிட்டார். இதனை பார்த்த முத்து, அவர்கள் செய்த தவறுக்கு இது சரியான தீர்ப்பு இல்லை. நான் கொடுக்கிறேன் சரியான தீர்ப்பு என்று சொல்லி மனோஜ் ஆரம்பித்த ஷோரூமுக்கு இனி அப்பா தான் ஓனர்.
அதனால் அந்த கடையின் ஓனர்ஷிப்பை மாற்றிவிடலாம், அப்பாவை நிர்வாகம் பண்ண வைக்கலாம் என்று முடிவு பண்ணிவிட்டார். முத்து இந்த விஷயத்தைப் பற்றி சொல்லிய பொழுது ரோகிணி, மனோஜ் மற்றும் விஜயா எதுவும் பேசாமல் வாயை மூடி கொண்டார்கள். இதனால் கடுப்பான விஜயா, ரோகினிடம் சென்று இந்த 27 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் பழைய மாதிரி நீங்களும் மரியாதையாக இருக்கலாம்.
அந்த ஷோரூம் உங்களுக்கு சொந்தமாகிவிடும், அதற்கு உன் கையில் தான் இருக்கிறது. உங்க அப்பாவிடம் சொல்லி அந்த 27 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். இதனால் பணத்துக்கு என்ன பண்ணுவது யாரிடம் கேட்பது என்று தெரியாமல் ரோகிணி தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் ஷோரூமுக்கு ரோகிணி மற்றும் மனோஜ் வழக்கம்போல் கிளம்பி போய் விட்டார்கள்.
ஆனால் வீட்டில் இருக்கும் முத்து, அண்ணாமலையிடம் நீங்கள் கிளம்பி ஷோரூமுக்கு வரவேண்டும். நீங்கள் பொறுப்பேற்க வேண்டும், அப்பொழுது தான் மனோஜ் இனி யாரிடமும் ஏமாறாமல் இருப்பான். ஒன்னு அவனை யாராவது ஏமாற்றுகிறார்கள், அல்லது இவன் போய் யாரிடமாவது ஏமாந்து விடுகிறான். இப்படியே போனால் அந்த கடையும் இல்லாமல் போய்விடும்.
அதனால் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் இனி மனோஜ் அந்த கடையில் கணக்கு வேலைகளை பார்க்கும் ஒரு ஊழியர் தான் என்று சொல்லிவிடுகிறார். முத்து சொல்வதும் சரிதான் என்று அண்ணாமலை, விஜயாவிடம் சொல்லி கடைக்கு கிளம்பி விடுகிறார்கள். அதை நேரத்தில் ரவி மற்றும் சுருதியும் நேரடியாக கடைக்கு போய் விடுகிறார்கள். பிறகு ரோகிணி மற்றும் மனோஜ் என்ன இங்கு வந்து இருக்கீங்க என்று கேட்கும்பொழுது முத்து மற்றும் மீனாதான் எங்களை இங்கே வர சொன்னார்கள் என்று சொல்கிறார்கள்.
அப்பொழுது ரோகிணி மற்றும் மனோஜ்க்கு புரிந்து விட்டது இந்த கடை நம்மை விட்டு போகப்போகிறது என்று. அதன்படி ஷோரூமுக்கு அனைவரும் சென்ற நிலையில் ஓனர் பொறுப்பை அண்ணாமலை பெற்றுக் கொண்டார். அதற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு முத்து மற்றும் மீனா கோவிலுக்கு போகிறார்கள். அங்கே வயதான ஒரு தம்பதிகளுக்கு 60-ஆம் கல்யாணம் நடக்கும் தருணத்தில் முத்து மற்றும் மீனா அவர்களிடம் வாழ்த்து வாங்கி கொள்கிறார்கள்.
அப்பொழுது மீனா, முத்துவிடம் கொடுக்கும் ஐடியா என்னவென்றால் இவர்களை வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். அத்துடன் இவர்கள் மலேசியாவில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்றால் ரோகிணி அப்பாவை பற்றி விசாரித்து அவர் இப்பொழுது என்ன நிலைமையில் இருக்கிறார் என்றும் தெரிந்து கொள்ளலாம் என மீனா ஐடியா கொடுக்கிறார்.
முத்துவுக்கும் இந்த ஐடியா சூப்பர் என்று தோன்றியதால் அந்த வயதான தம்பதிகளை வீட்டிற்கு கூட்டிட்டு போவார். போனதும் அனைவரிடமும் அறிமுகப்படுத்திவிட்டு சாப்பாடுகளையும் பரிமாறிய பின் ரோகிணி அப்பாவை பற்றி விசாரிக்க போகிறார்கள். ஆனால் உண்மையில் ரோகினிக்கு அப்படி ஒரு அப்பாவும் இல்லை எந்த இடத்தில் எப்படி இருக்கிறார் என்பதும் தெரியாத நிலையில் இருப்பதால் அவர்களிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் வசமாக ரோகிணி சிக்கித் தவிக்கப் போகிறார்.
இதன் மூலம் குடும்பத்தில் அடுத்த பூகம்பம் தயாராகிவிட்டது. அத்துடன் இந்த விஷயத்தை முத்து அப்படியே விடமாட்டார் நிச்சயம் அடுத்தடுத்த விஷயங்களை கண்டுபிடிக்கும் விதமாக ரோகிணி பற்றிய ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவார். இனி ரோகிணிக்கு நல்ல காலமே இல்லை என்பதற்கு ஏற்ப திரும்புகிற இடமெல்லாம் கன்னிவெடி தான் என்பதற்கு ஏற்ப முத்துவிடம் சிக்கி கல்யாணியின் சுயரூபம் வெளிவரப் போகிறது.