வீட்டை விட்டுப் போன ரோகினியின் அடுத்த டிராமா.. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் முத்து மீனா

sirakadikkum asai
sirakadikkum asai

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மலேசியா பொன்னும் கிடையாது பணக்கார வீட்டு குடும்பமும் கிடையாது என்ற உண்மை விஜயாவுக்கு தெரிந்து விட்டது. அதனால் ஆக்ரோஷமான விஜயா, ரோகிணியை அடித்து வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். ஆனால் ரோகிணி ஏதோ சொல்ல வரப்போவது போல் என்னை கொஞ்சம் பேச விடுங்கள் என்று கெஞ்சுகிறார்.

ரோகிணியின் பேச்சைக் கேட்டு மீனா, ரோகிணி என்ன சொல்ல வராங்கன்னு கொஞ்சம் கேட்டுட்டு நீங்க பேசுங்க என்ன சொல்கிறார். ஆனால் விஜயா நான் கூட்டிட்டு வந்த இவள் பொய் மேல பொய் சொல்லி எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறார். அதனால் ரோகிணி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான்தான் முடிவு எடுக்க முடியும் யாரும் தலையிடக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு ரோகிணி, நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் இது என்னுடைய வீடு என்று சொல்லி மனோஜிடம் பேசுகிறார். ஆனால் மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் விஜயா, ரோகினியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். அத்துடன் கொஞ்சமாவது சூடு சொரணை உனக்கு இருந்தால் இந்த வீட்டுக்குள் வராதே என்று கதவை சாத்தி விடுகிறார்.

அடுத்து ரோகிணி வித்யா வீட்டிற்கு போகிறார், அங்கே போனதும் நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்பொழுது வித்யா ஆறுதல் சொல்லிய நிலையில் ரோகிணி அதெல்லாம் எனக்கு தேவையில்லை எப்படி அந்த வீட்டிற்குள் நான் போக வேண்டும் என்று எனக்கு தெரியும். நல்ல வேளை என்னை வீட்டுக்குள்ளே வச்சு கொடுமை படுத்துவார்கள் என்று நினைத்தேன், ஆனால் வெளியே அனுப்பி அவங்களும் ஒரு தப்பு பண்ணிட்டாங்க.

இனி இது தப்ப வச்சு நான் உள்ள போய் விடுவேன் என்று புதுசாக ஒரு ட்ராமாவை போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் என்னுடைய மாமனார் அண்ணாமலை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் எப்படியும் என்னை வீட்டிற்குள் கூட்டிட்டு போவதற்கு வந்து விடுவார் என்று சொல்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலையை பார்த்து செண்டிமெண்டாக பேசி எப்படியும் ரோகினி உள்ளே போய்விடலாம் என்ற நினைப்பில் தைரியமாக இருக்கிறார்.

ஆனால் தற்போது வரை ரோகிணி கையும் களவுமாக மாட்டின பிறகும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் கெத்தாக தான் இருக்கிறார். இதை எல்லாம் பார்க்கும் பொழுது தான் ரோகினி மீது கொஞ்சம் கூட பரிதாபமே ஏற்படவில்லை. இன்னும் அடுத்து என்ன பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி அந்த குடும்பத்திற்குள் போகலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக முத்து மற்றும் மீனா, கசாப்பு கடை மணியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ரோகிணி பற்றிய விஷயங்களை அவங்க தான் போட்டு உடைத்தார்கள். இப்ப ரெண்டு பேரும் மாத்தி மாத்தி விஜயா செஞ்சது தப்பு என்று பேசி ரோகிணிக்கு சப்போர்ட்டாக பாவப்பட்டு மனோஜிடம் பேசிக் கொள்கிறார்கள். இதுதான் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்.

Advertisement Amazon Prime Banner