
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த மணியை முத்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்து சொல்ற விஷயம் எதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு புரியவில்லை. உடனே முத்து, பிரவுன் மணியை வாயைத் திறந்து உண்மை எல்லாத்தையும் சொல்லுங்க என்று சொல்கிறார். அப்பொழுது மணி நான் மலேசியாவில் இருந்து வரவில்லை. இங்கேதான் கசாப்பு கடை வைத்திருக்கிறேன்.
எனக்கு ரோகிணி அக்கா பொண்ணு கிடையாது, யாருன்னு தெரியாது. ரோகிணியின் தோழி வித்தியா எனக்கு நல்ல பழக்கம், அவள் என்னிடம் உதவி என்று கேட்டதனால் ஆரம்பத்தில் விளையாட்டாக செய்ய தொடங்கினேன். ஆனால் அதன் பிறகு தான் இந்த ட்ராமாவின் அர்த்தம் எனக்கு புரிந்தது. இருந்தாலும் ரோகிணியின் வாழ்க்கைக்காக நான் தொடர்ந்து நடித்து வந்தேன். ஆனால் இதற்காக நான் ஒத்த பைசா கூட வாங்கவில்லை.
நான் பணத்துக்காக எதையும் செய்யவில்லை என்று எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். உடனே மனோஜ் அப்படி என்றால் ரோகிணியின் அப்பா எங்கே இருக்கிறார், என்ன பண்ணுகிறார் என்று கேட்கிறார். அதற்கு மணி, எனக்கு அந்த விவரங்கள் எதுவுமே தெரியாது என்று சொல்லி ரோகினிடம் பொய் என்னைக்குமே நிலைக்காது. என்னை மன்னித்துவிடு என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்து அண்ணாமலை, இதுவரை இந்த அளவுக்கு கோபப்பட்டது இல்லை முதல் முறையாக ரோகினியிடம் கோபமாக பேசி எவ்வளவு பொய் சொல்லி இருக்கிறாய். எங்களை எல்லாம் முட்டாளாக்கி இருக்கிறாய், குடும்ப பொண்ணு யாராவது இப்படி பண்ணுவாங்களா? எங்கள மட்டும் ஏமாற்றினியா, உன் புருஷனையும் சேர்த்து ஏமாற்றி இருக்கிறாயா?
மனோஜ் உனக்கு இதெல்லாம் தெரியுமா? நீயும் சேர்ந்து தான் இப்படி ஏமாற்றி இருக்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிய நிலையில் விஜயா ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். உன்னை நான் கூட்டிட்டு வந்த மருமகள் என்று எவ்வளவு பெருமையாக பேசி உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடினேன். ஆனால் நீ எத்தனை பொய் சொல்லி எங்களை எல்லாம் ஏமாற்றி இருக்கிறாய்.
வாயைத் திறந்தது எல்லாம் பொய், பொய்க்கு மேல பொய் சொல்லி என்ன சாதித்தாய்? உன்னை பற்றி எதுவும் தெரியாமல் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது என்னுடைய தப்பு தான் என்று கோபத்தைக் காட்டி விட்டார். இதுவரை ரோகினி பணக்கார வீட்டு பொண்ணு, நான் கூட்டிட்டு வந்த மருமகள் என்று உச்சகட்ட ஆணவத்தில் இருந்த விஜயாவுக்கு இதுதான் சரியான பதிலடி.
ரோகிணி மாதிரி ஒரு ஆளு தான் விஜயாவின் ஆணவத்திற்கு தேவை என்பதற்கு ஏற்ப நல்ல ஆப்பு வச்சு விட்டார். தற்போது எல்லா உண்மையும் தெரிந்தவுடன் ரோகிணி எதை சொல்லியும் சமாளிக்க முடியாமல் மனோஜிடம் கெஞ்சுகிறார். மனோஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த நிலையில் விஜயா, ரோகினையை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.
அதற்கு ரோகிணி நான் வீட்டை விட்டு போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த நிலையில் விஜயா, ரோகினி கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டார். இது மட்டுமில்லாமல் இனி இது ரோகினியே இல்லை கல்யாணி தான். கல்யாணியின் ரகசியம் எதுவென்று அடுத்தடுத்து முத்து கண்டுபிடித்து உண்மையான சுயரூபத்தை கொண்டு வரப் போகிறார்.