ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ரோஹித் பற்றி தவறாக பேசிய ஆஸ்திரேலியா வீரர்கள்.. கௌதம் கம்பிருக்கு ஏற்பட்ட அழுத்தம் 

சிட்னியில் மிக முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். வழக்கம் போல் இந்திய அணி இந்த போட்டியிலும்  சொதப்பி வருகிறது.

 டாஸ்ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.185  ரண்களுக்கு அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவர் விலகியதுதான் இப்பொழுது கடும் பேசுபொருளாக மாறி வருகிறது.

 முக்கியமான ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா விலகியதைப் பற்றி ஆஸ்திரேலியா  பத்திரிக்கையில் கண்டபடி பேசி வருகிறார்கள். இந்தத்  தொடரை இந்தியா இழக்குமா அல்லது சமன் செய்யுமா என்பதை தீர்மானிக்கும் கடைசி  போட்டி இது. 

  இப்பேற்பட்ட போட்டியில்  ரோகித் சர்மா கட்டாயம் விளையாடிருக்க வேண்டும். ஒரு அனுபவ வீரர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான். தற்போது அவர் பார்ம் கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பது நல்லது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி பரப்பி வருகிறது.

 ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் மார்க் டைலர்  ரோஹித் சர்மா இந்திய அணிக்குள் இருக்கும் தேவையில்லாத சுமை. கௌதம் கம்பிற்கு எப்படி அணியை தேர்ந்தெடுப்பது என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலியா போன்று வலுவான அணியுடன் மோத சிறந்த அணியை கட்டமைக்க தவறுகிறார் என ஆஸ்திரேலியா குற்றம் சாட்டி வருகிறது.

Trending News