தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த ரோஜா சமீபகாலமாக அக்கட தேசத்தில் அரசியலில் ஈடுபட்டு செட்டில் ஆகிவிட்டார். 1992ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் ரோஜா அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து வெளியான சூரியன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ரோஜாவை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. அதனைத் தொடர்ந்து அதிரடிப்படை, உழைப்பாளி போன்ற படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்றவருக்கும் அங்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தார். அன்றைய காலத்தில் ரோஜாவை பார்த்து கிறங்கிப் போகாத நடிகர்களே இல்லையாம்.
அந்தளவுக்கு தன்னுடைய கட்டுடல் மேனியால் அனைவரையும் கவர்ந்த ரோஜா பின்னர் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.
சினிமாவில் பெரும்பாலும் கவனம் செலுத்தாமல் தற்போது அரசியலில் களமிறங்கி ஆந்திராவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விளையாட்டு விழாவுக்கு ரோஜா தலைமை தாங்கச் சென்றிருந்தார்.
சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார், அதை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். அதாவது அழகில் ரோஜாவை விட ஹீரோயின் ரேஞ்சுக்கு மிரள விட்டுள்ளார் அவரது மகள் அன்ஷுமலிகா செல்வமணி.