திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரோஜா படத்தில் நடிக்க இருந்த ஸ்டைலிஷ் டைரக்டர்.. பின் அரவிந்த்சாமியை வைத்து செம்ம ஹிட் கொடுத்திருக்காரு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தவர் அரவிந்த்சாமி. இவர் நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி படத்தையடுத்து அன்றைய காலகட்டத்தில் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

அவர் நடிப்பில் வெளியான தளபதி, ரோஜா,பாம்பே மற்றும் மின்சார கனவு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று சினிமாவில் இவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது.

ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்த அரவிந்த் சாமி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராததால் சினிமா விட்டு சிறிது காலங்கள் விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

தனி ஒருவன் படத்திற்காக மோகன் ராஜா ஒரு சிறந்த வில்லனை எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் கண்களில் அரவிந்த்சாமி தென்பட உடனே தனிஒருவன் படத்தில் வில்லனாக தேர்ந்தெடுத்தார்.

rajiv menon mani ratnam
rajiv menon mani ratnam

இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவிற்கு எந்த அளவுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததோ அதே அளவிற்கு வில்லனாக நடித்த அரவிந்த்சாமிகும் பாராட்டும் வரவேற்போம் கிடைத்தது.

அதையடுத்து சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் பல வருடங்கள் முன்பு வெளியான ரோஜா படத்தில் முதலில் நடிப்பதற்கு அரவிந்தசாமி தேர்ந்தெடுக்கவில்லை என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

rajiv-menon
rajiv-menon

அதாவது ரோஜா படத்தில் முதலில் அரவிந்த் சாமிக்கு பதிலாக மணிரத்தினத்தின் நண்பரும் ஒளிப்பதிவாளரான ராஜ் மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவரால் நடிக்க முடியாமல் போனதால் பின்பு அரவிந்த்சாமியை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ராஜீவ்மேனன் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் சர்வம் தாள மையம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்த தகவல் பல வருடங்கள் பிறகு வெளிவந்தாலும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending News