சன் டிவி தொடர்களில் டிஆர்பியில் முதலில் இருப்பது ரோஜா தொடர். தற்போது வெற்றிகரமாக 1000வது எபிசோடை கடந்துள்ளது. ரோஜா தொடரை சரிகம நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்தொடரில் சிபி சூரியன், பிரியங்கா நல்காரி முன்னிலை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து வடிவுக்கரசி, ராஜேஷ், காயத்ரி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இத்தொடர் 2018 ம் ஆண்டு ஏப்ரம் மாதம் முதல் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக மற்ற சீரியல்களை போல் ரோஜா சீரியலின் ஷுட்டிங்கும் 2020ம் ஆண்டு மார்ச் 19 ம் தேதி நிறுத்தப்பட்டது.
மூன்று மாத இடைவெளிக்கு பிறகு ஜுலை 27 ம் தேதி முதல் புதிய எபிசோட்கள் ஒளிபரப்ப செய்யப்பட்டது. ரோஜா தொடர் ஆரம்பத்தில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிறகு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரைம் டைமான இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. இதனால் அதிக ரசிகர்கள் இத்தொடரை பார்க்க ஆரம்பித்தார்கள்.
ரோஜா தொடரில் திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து அர்ஜுன், ரோஜாவுக்கு முதலிரவு நடந்திருக்கிறது. ஒருவழியா 1000 எபிசோடுகள் கழித்து இது முடிஞ்சது என சீரியல் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.
ரோஜா தொடர் 4 மொழிகளில் ரீமேக் செய்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கன்னடத்தில் செவ்வந்தி என்றும், இந்தியில் சிந்தூரி கி கீமத் என்ற பெயரிலும், மலையாளத்தில் களிவீடு என்ற பெயரிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கில் ரோஜா என்ற பெயரிலேயே ரீமேக் செய்தும், பிருந்தாவனம் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில் ரோஜா தொடர் ஆயிரமாவது எபிசோடை தொட்டு உள்ளதால் பல தரப்பிலிருந்தும் இத்தொடருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. இதனால் ஆயிரமாவது எபிசோடை நெருங்கியதால் சீரியலில் இனி டுவிஸ்ட்களுடன் சுவாரஸ்யமான எபிசோடுகள் வரும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.