திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை.. பலருக்கும் ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா 3. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஓவியா, வேதிகா, சுனிதா போன்ற நடிகைகள் நடித்திருந்தனர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் விமர்சகர் ரீதியாக வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக முந்தைய படங்களின் காப்பி என்று எழுதினர்.

இருந்தாலும் கோடை விடுமுறையை முன்னிட்டு களம் இறங்கியதால் குழந்தைகளுக்கு இந்த படம் பிடித்து போக வசூல் ரீதியாக 100 கோடியை கடந்து. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரித்த லாபகரமான படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.

சன் டிவியில் ரோஜா சீரியல் மூலம் அனைவருக்கும் பிரபலமான நடிகைதான் பிரியங்கா நல்கரி. தற்போதைக்கு சன் டிவியில் அதிக டிஆர்பி இந்த சீரியலுக்கு தான்.

இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா நல்கரி ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். பலமுறை இந்த படம் பார்த்திருந்தாலும் அவரை பார்த்திருக்க வாய்ப்பபில்லை.

தற்போது ரோஜா சீரியல் நடிகை தான் காஞ்சனா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

roja-serial-actress-acted-in-kanchana-3-cinemapettai
roja-serial-actress-acted-in-kanchana-3-cinemapettai

Trending News