திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரோஜா சீரியலால் சன் டிவிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தலைவலி.. அடுத்த எபிசொட் ஓடுமா ஓடாதா.!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் சீரியல்தான் ரோஜா. இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்பொழுது இந்த சீரியலில் கதாநாயகன் அர்ஜுன்  கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு தொடர்பான காட்சிகள் சில நாட்களாக காட்டப்படுவதில்லை. காரணம் அவர் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட இருப்பதால் படப்பிடிப்பிலிருந்து சில நாட்களுக்கு விடுமுறை எடுத்துள்ளார்.

இதேபோல் வில்லி அணு மற்றும் கல்பனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளின் காட்சிகளும் இடம் பெறாததால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இதுபற்றிய விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு கோரிக்கை விடுக்க அவர்களும் இது குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் அனு மற்றும் கல்பனா  கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு கொரோனா தொற்று  உறுதியானதால் அவர்கள் படப்பிடிப்பிற்கு வரவில்லை. இதனால் இவர்கள் தொடர்பான காட்சிகளும் சில நாட்களாக காட்டப்படவில்லை ௭ன்னும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். மேலும் இந்த கடின சூழ்நிலையிலும் தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகப் பெருமக்களுக்கு நன்றி என்றும் தயாரிப்பாளர் மனமுருகி தெரிவித்துள்ளார். மேலும் சீரியல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விறுவிறுப்பாக செல்லும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

roja-seroja-sroja-roja-serial-cinemapettai2serial-cinemapettai2erial-cinemapettai2rial-cinemapettai2
roja-serial-cinemapettai

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த நடிகை நடிகைகள் இந்த சூழ் நிலை நீடித்தால் தயாரிப்பாளர் தலையில் துண்டைப்  போடும் நிலைமைக்கு வந்து விடுவார்கள். விரைவில் குணமாகி வர வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.

Trending News