சன் டிவியின் சீரியல்களில் ஆரம்பத்திலிருந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்து வந்த சீரியல் ரோஜா. இந்த நெடுந்தொடரில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையே நடக்கக்கூடிய ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஏராள ரசிகர் கூட்டம் உள்ளனர்.
அவ்வப்போது இந்த நெடுந்தொடரில் அதிரடி காட்சிகள் இடம்பெற்று, இந்த சீரியல் மாசாக ஒளிபரப்பாகி வந்தது அனைவரும் அறிந்ததே. கதாநாயகிக்கு அனைத்து சமயங்களிலும் கதாநாயகன் துணையாக இருப்பதே மேலும் இந்தக் கதைக்கு வலுவாக அமைகிறது.
அண்மையில் ரோஜாவின் தாய் செண்பகம் தனது நினைவினையிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். செண்பகத்திற்கு தனது மகள் ரோஜா என்ற உண்மை தெரிய வரும் நேரத்தில் இவருக்கு மெமரி லாஸ் ஆகிவிட்டது.
தற்போது செண்பகத்திற்கு நினைவு திரும்பி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். செண்பகத்திற்கு நினைவு திரும்பியதே பெரிய திருப்பம். அதனை தொடர்ந்து விரைவில் அனைத்து உண்மைகளையும் அறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நெடுந்தொடரில் அடுத்த அடுத்ததாக பல அதிரடி காட்சிகளையும், ரொமான்ஸ் காட்சிகளையும் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் செண்பகத்திற்கு ஏற்பட்ட மெமரி லாஸ் சற்று சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வருவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் .
எனவே இவ்வளவு நாள் அம்மா பாசத்திற்கு ஏங்கிய ரோஜா, இனி வரும் நாட்களில் சீரியலில் கலகலப்புடன் அம்மாவின் அரவணைப்பில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.