Serial: தற்போதைய சீரியல்களில் அக்கட தேசத்து ஹீரோ மற்றும் ஹீரோயின் களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது.
இது எந்த அளவுக்கு நம்ம ஊர் கலைஞர்களை பாதிக்கிறது என்பதற்கு வடிவுக்கரசியின் பேட்டி ஒன்று பெரிய உதாரணமாக இருக்கிறது.
வடிவுக்கரசி தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் சீரியலிலும் தனக்கான அடையாளத்தை பெற்றிருக்கிறார். இவரை சன் டிவி சீரியல் ஹீரோ ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடத்திய விதத்தைப் பற்றி பேசி இருக்கிறார்.
சீனியாரிட்டிக்கு மதிப்பு இல்லாம போச்சே!
வடிவுக்கரசி சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த சீரியலின் ஹீரோ வடிவுக்கரசிக்கு அதிக வசனங்கள் கொடுக்கப்பட்டால் கேள்வி கேட்பாராம்.
எதுக்காக இந்த காட்சியில் வடிவுக்கரசிக்கு மட்டும் அதிக வசனம் இருக்குது. நான் தானே ஹீரோ எனக்கும் வசனம் கொடுங்கள் என்று மல்லு கட்டுவாராம்.
ஒரு கட்டத்தில் வடிவுக்கரசு அவருக்கே இந்த வசனத்தை கொடுத்துடுங்க என்று சொல்லும் அளவுக்கு பிரச்சனை நடந்திருக்கிறது. இதை தான் தன்னுடைய பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.