வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்தியன்-2வில் இணைந்த ரொமான்டிக் ஹீரோ.. வாரிசுக்கு கிடைக்காத வாய்ப்பு, ரீ-என்ட்ரி கைகொடுக்குமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த அந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.

சில சமரசங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நவரச நாயகன் கார்த்திக் இணைந்துள்ளார். 80, 90 காலகட்ட சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர்.

பல வெற்றி திரைப்படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த இவர் சில வருடங்களுக்கு பிறகு குணச்சித்திரம், வில்லன் போன்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காத இவர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனால் இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கமல் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். இப்போது கார்த்திக்கும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் கார்த்திக் ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அவருடைய அந்த கதாபாத்திரம் படத்திற்கு மிக முக்கியமான கதாபாத்திரமாகவும், திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உலக நாயகனும், நவரச நாயகனும் இணைந்து வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கைத்தட்டலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியன் 2 ஒரு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது தவிர பிரசவத்தின் காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகுவதாக அறிவித்தார். ஆனால் தற்போது அவர் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் 13ஆம் தேதி அவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News