Nayanthara: நயன்தாரா கைவசம் இப்போது ஒரு டஜன் படங்கள் இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் என இவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். அதேபோல் பிசினஸ், குடும்பம், குழந்தை என ஒரு பக்கம் கவனித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் இவர் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். ரீல்ஸ் வீடியோ, போட்டோ என தினம் தினம் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.
அதாவது இவர் கவினுடன் இணைந்து நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது கவின், நயன்தாரா இருவரும் ரொமான்ஸ் லுக்கில் இருக்கும் போட்டோ வெளிவந்துள்ளது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக இருந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். எல்லாம் சரி ஆனால் கவினுக்கு வயது 34 நயன்தாராவுக்கு 39. இருவருக்கும் ஐந்து வயது வித்தியாசம் இருக்கிறது.
நயன்தாராவுக்கு ஜோடியான கவின்
அப்படி இருக்கும் போது இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது பலரின் கேள்வி. ஆனால் கதையே வயது குறைவான இளைஞன் வயதில் மூத்த பெண்ணை காதலிப்பது தானாம். கிட்டத்தட்ட வல்லவன் பட கதை போல் தான்.
இப்படியாக ஒரே ஒரு போட்டோ மூலம் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைத்துள்ளார் நயன்தாரா. மேலும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் இவ்வளவு சீக்கிரம் லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தற்போது நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் படத்தில் இவர் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் அவரின் அடுத்த பட அப்டேட் வாழ்த்துக்களை பெற்று வருகிறது. இதுதான் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என கவினுக்கு பாராட்டுக்களும் ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க போகும் கவின்
- பொன்னியின் செல்வன் நாயகன்களுடன் மோதும் கவின்
- ரிலீசுக்கு முன்பே கோடிகளில் வியாபாரமான பிளடி பெக்கர்
- சூர்யா-ஜோ முதல் விக்கி-நயன் வரை