பாகுபலி என்ற ஒற்றை படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனராக பிரபலமானார் ராஜமௌலி. அதற்கு முன்புவரை தெலுங்கு சினிமாவில் மட்டும் அறியப்படும் இயக்குனராக இருந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக கருதப்படுவதால் இவர் இயக்கும் படங்களைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ராஜமௌலி ஒரு புத்திசாலி என்பது அனைவருக்கும் தெரியும் ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தால் அது 600, 700 கோடி தான் வசூல் பெரும் என்பதால் வசூலில் நம்மள யாரும் முறியடித்து விடக்கூடாது என்பதற்காக தெலுங்கில் என்டிஆர் மற்றும் ராம் சரண், ஹிந்தியில் ஆலியா பட் மற்றும் அஜய் தேவன், தமிழில் சமுத்திரகனி ஹாலிவுட்டில் அலிசன் 2d போன்ற பல பிரபலங்களை தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
இந்த படங்கள் அனைத்தும் மொழியில் வெளியாகும் போது ஒவ்வொரு மொழியிலும் ஏதாவது ஒரு பெரிய நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள். அதன் மூலம் வசூலை வாரிக் குவித்து விடலாம் என்று கணக்குப் போட்டுத்தான் நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எப்படியாவது விரைவில் படத்தை இயக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த ராஜமௌலிக்கு தொடர்ந்து ஏமாற்றம் நிலவி வருவதால் தற்போது குறும் படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்ட முடிவெடுத்துள்ளார்.
அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில் பேரிடர் பணியில் ஈடுபட்ட நபர்களை வைத்தும் காவல்துறையினரின் பங்களிப்பும் அவரது அர்ப்பணிப்பும் உணர்த்தும் விதமாகவும் மருத்துவர்களின் சேவையை காட்டும் விதமாகவும் ஒரு குறும்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.