தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர்கள் இருக்கிறார்களோ அதே போல தெலுங்கு சினிமாவில் வெற்றி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. ராஜமவுலி மிகப் பெரிய புத்திசாலி என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அவரது படத்தில் ஒரு மொழி நடிகர்கள் இருப்பதைவிட பழமொழி நடிகர்களை நடிக்க வைத்து விடுவார்.
அதற்கு காரணம் படத்தின் வசூலையும் அதிகரித்து விடலாம் இதன்மூலம் தனக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்பதுதான். தற்போது கூட ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடிக்க வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இருதரப்பு ரசிகர்கள் பார்த்தாலே படம் வெற்றி அடைந்து விடும். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலிருந்து ஆலியா பட் அஜய்தேவ்கன் தமிழில் சமுத்திரகனி போன்ற பல நட்சத்திரங்களை வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார்.
![RRR-poster](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/RRR-poster.jpg)
படம் வெளியானால் அனைத்து மொழிகளிலும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து விடும் என்பதற்கு இது ஒரு சான்று. சமீபகாலமாக ஆர் ஆர் ஆர் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது ஆர் ஆர் ஆர் படத்தின் கதை ஆசிரியரான விஜயேந்திர பிரசாத் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார்.
இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் ஆக்ஷன் மற்றும் தேசபக்தி உணர்த்தும் விதமாக கதையை அமைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 2 சுதந்திர போராட்ட வீரர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள் அதன் பிறகு எப்படி போராடுகிறார்கள் என்பதை பற்றிய கதை தான் எனக் கூறியுள்ளார்.